ஆப்பிள் நிறுவப்பட்டதில் இருந்து அதே நிறுவனத்தில் 47 வருடங்களாக பணிபுரிந்த வரும் ஊழியர்
செய்தி முன்னோட்டம்
தனது 14 வயதில் இருந்து 47 வருடங்களாக ஆப்பிள் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் கிறிஸ் எஸ்பினோசா என்ற ஊழியர், ஆப்பிளில் மிக நீண்ட காலம் பணிபுரிந்தவர் என்ற பெயரை எடுத்துள்ளார்.
கிறிஸ் எஸ்பினோசா உயர்நிலை பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது தனது 14 வயதில் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார்
முதலில், 1976ஆம் ஆண்டு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தன்று ஆப்பிள் நிறுவனம் மிக சிரியதாக தொடங்கப்பட்டது போது, எஸ்பினோசா அந்த நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக வேலைக்கு சேர்ந்தார்.
1977ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் 'வோஸ்' வோஸ்னியாக் ஆகியோர் அந்த நிறுவனத்தை வாங்கிய போது, அவர் அதில் ஒரு அதிகாரப்பூர்வ ஊழியரானார். ஆப்பிள் நிறுவனத்தின் 8வது ஊழியர் அவர் ஆவார்.
ஆப்பிள் நிறுவனம்
பகுதி நேர ஊழியராக இருந்து ஆப்பிளின் மதிப்புமிக்க மூத்த பணியாளர் ஆன எஸ்பினோசா
அந்த வருடத்தின் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது Apple II BASIC இயங்குதளத்தை கிறிஸ் எஸ்பினோசா சோதித்திருக்கிறார். அதுவே அவரது முதல் அதிகாரப்பூர்வ பணியாகும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் 1985 ஆம் ஆண்டு ஆப்பிளை விட்டு வெளியேறி NeXT என்ற கல்வி கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கும் போது, எஸ்பினோசா ஆப்பிளின் மூத்த பணியாளராக இருந்தார்.
1997 இல் ஆப்பிள் நிறுவனம் NeXT ஐ வாங்கிவிட்டு, ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்திற்குத் திரும்பிய பிறகும் அவர் அந்த பதவியிலேயே இருந்தார்.
அதன் பிறகு, அவர் தற்போது வரை அவர் ஆப்பிள் நிறுவனத்தில் தான் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தற்போது 61 வயதாகிறது.