ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சை அமெரிக்காவிலேயே தடை செய்த மசிமோ கார்ப்பரேஷனின் வழக்கு
செய்தி முன்னோட்டம்
ரத்தத்தில் உள்ள பிராணவாயு அளவை அளவிடும் முறை தொடர்பாக மசிமோ கார்ப்பரேஷன் பதிவிட்ட வழக்கைத் தொடர்ந்து, ஆப்பிளின் சில ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை வரும் டிசம்பர் 25ம் தேதி முதல் விற்பனை செய்யத் தடை விதித்திருக்கிறது சர்வதேச வர்த்தக ஆணையம்.
முன்னதாக இதே போன்று சில வழக்குகளை அந்நிறுவனம் சந்தித்திருந்தாலும், இந்த வழக்கைத் தொடர்ந்து ஆப்பிளின் தாய்நாடான அமெரிக்காவிலேயே ஸ்மார்ட்வாட்ச் விற்பனையை நிறுத்த வேண்டிய சூல்நிலை ஆப்பிளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
மேற்கூறிய வகையில் பிராணவாயு அளவை அளவிடும் முறைக்கு மசிமோ கார்ப்பரேஷன் பெற்றிருக்கும் காப்புரிமையை மீறும் வகையில், கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு தொழில்நுட்பத்தை தங்களுடைய சீரிஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 ஸ்மார்ட்வாட்ச்களில் ஆப்பிள் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
ஆப்பிள்
சட்டரீதியிலும் தயாராகும் ஆப்பிள்:
ஒரு வகையில் தங்களுடைய ஆப்பிளின் வாட்ச்சில் உள்ள அல்கரிதமை அந்நிறுவனம் மாற்ற முயற்சித்து வரும் நிலையில், மறுபுறம் சட்டரீதியிலும் இதனை எதிர்கொள்ள அந்நிறுவனம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர, மசிமோ கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் சுமூகமாக இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளவும் ஆப்பிள் திட்டமிடலாம் எனவும் கூறப்படுகிறது.
எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், சட்டத்தை மீறி நடக்க முடியாது என்பதற்கு ஆப்பிளின் இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம் எனகிற ரீதியில் கருத்து தெரிவித்திருக்கிறது மசிமோ கார்ப்பரேஷன் நிறுவனம். என்ன நடக்கவிருக்கிறது என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.