Page Loader
பிஸ்லரி நிறுவனத்தை வழிநடத்தவிருக்கும் ரமேஷ் சௌஹானின் மகள் ஜெயந்தி சௌஹான்
பிஸ்லரி நிறுவனத்தை வழிநடத்தவிருக்கும் ரமேஷ் சௌஹானின் மகள் ஜெயந்தி சௌஹான்

பிஸ்லரி நிறுவனத்தை வழிநடத்தவிருக்கும் ரமேஷ் சௌஹானின் மகள் ஜெயந்தி சௌஹான்

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 23, 2023
03:41 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் முன்னணி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் விற்பனையாளரான பிஸ்லரியை டாடா குழுமம் வாங்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. பிஸ்லரி நிறுவனத்தை உருவாக்கி 60 ஆண்டுகளாக அதனை நடத்தி வந்த ரமேஷ் சௌஹானும், பிஸ்லரி நிறுவனத்தை தான் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார். பொதுவாக, இதுபோன்ற பெருநிறுவனங்களை தந்தைக்குப் பிறகு அவர்களது மகனோ அல்லது மகளோ தலைமைப் பொறுப்பேற்று முன்னின்று நடத்துவார்கள். ஆனால், ரமேஷ் சௌஹானின் ஒரே மகளான ஜெயந்தி சௌஹானுக்கு பிஸ்லரி நிறுவனத்தின் நடத்தை விருப்பமில்லை எனத் தெரிவித்ததையடுத்து, அந்நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்தார் ரமேஷ் சௌஹான். அதன் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்ட ஜெயந்தி சௌஹான் பிஸ்லரி நிறுவத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தார்.

வணிகம்

7000 கோடி சாம்ராஜ்யத்தை ஏற்றுக் கொண்ட ஜெயந்தி சௌஹான்: 

ரமேஷ் சௌஹானின் ஒரோ மகளான ஜெயந்தி சௌஹான் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பேஷன் துறையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, 24 வயதில் பிஸ்லரியின் டெல்லி அலுவலகத்தை தலைமைப் பொறுப்பை ஜெயந்தியிடம் வழங்கினார் ரமேஷ் சௌஹான். 2011-ல் பிஸ்லரியின் மும்பை அலுவலகத்தை கையில் எடுத்துக் கொண்ட ஜெயந்தி, அந்நிறுவனத்தின் பல்வேறு படிநிலைகளில் பணியாற்றியிருக்கிறார். தற்போது அந்நிறுவனத்தின் புதிய பொருட்கள் மேம்பாட்டு பிரிவில் கவனம் செலுத்தி வரும் ஜெயந்தி சௌஹான் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை கவனித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் பிஸ்லரி நிறுவனத்தைக் கைப்பற்றும் முடிவில் இருந்து டாடா குழுமம் பின்வாங்கியதைத் தொடர்ந்து, அந்நிறுவத்தனை அடுத்து வழிநடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ஜெயந்தி சௌஹான்.