
யுபிஐ சேவைக்கு பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப்பட்டால் சேவையை தொடரமாட்டோம்; சர்வேயில் ஷாக் கொடுத்த பொதுமக்கள்
செய்தி முன்னோட்டம்
லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பு, யுபிஐ பயனர்களில் ஏறத்தாழ 75 சதவீதம் பேர் பணப் பரிமாற்றத்திற்கு பரிவர்த்தனை கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
தடையற்ற மற்றும் செலவு இல்லாத உடனடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ சேவையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும், இந்த சேவைக்கு கட்டணம் விதிக்கப்படுமா என்ற கவலையும் பலரிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில், கூடுதல் கட்டணங்கள் அதன் பயன்பாட்டை கணிசமாக பாதிக்கும் என்பதை சர்வே தெளிவுபடுத்துகிறது.
இந்த சர்வே கடந்த ஜூலை 15 முதல் செப்டம்பர் 20 வரை ஆன்லைனில் நடத்தப்பட்டது.
சர்வே முடிவு
சர்வேயில் பொதுமக்கள் கூறியதன் முழு விபரம்
இந்த சர்வே மூலம் 38 சதவீதம் பேர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற பாரம்பரிய டிஜிட்டல் முறைகளை பயன்படுத்துவதாக கூறிய நிலையில், யுபிஐ மூலம் பணம் செலுத்துபவர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தத் தரவு, இந்தியாவில் விருப்பமான பணம் செலுத்தும் முறையாக யுபிஐயின் அதிகரித்து வரும் ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
இதற்கு காரணமான அதன் எளிமையான பண பரிமாற்ற வசதி மற்றும் பூஜ்ஜியக் கட்டணம் உள்ளது.
சர்வேயில் யுபிஐ பயனர்கள் 22 சதவீதம் பேர் மட்டுமே பணம் செலுத்துவதற்கு பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப்பட்டாலும் அதைத் தொடர தயாராக உள்ளனர்.
75 சதவீதம் பேர் பரிவர்த்தனை கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டால் யுபிஐயை பயன்படுத்துவதை நிறுத்திவிடுவதாக தெரிவித்துள்ளனர்.