மத்திய பட்ஜெட் 2024: 100 நகர் பகுதிகளில் தொழில் பூங்காக்கள் அமைக்கவிருப்பதாக அறிவிப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, "மாநிலங்களுடனும், தனியார் துறையுடனும் இணைந்து 100 நகர் பகுதிகளில், முழுமையான உள்கட்டமைப்புடன் கூடிய முதலீட்டுக்குத் தயாராக உள்ள தொழில் பூங்காக்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 தொழில் பூங்காக்களை உருவாக்க அனுமதி அளிக்கப்படும்" எனத்தெரிவித்தார்.
தொழிலாளர் தொடர்பான சீர்திருத்தங்கள்
நிதியமைச்சர் தனது மத்திய பட்ஜெட் உரையில் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல சேவைகளை வழங்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். மற்ற இணையதளங்களுடன் இ-ஷ்ரம் (e-shram) தளத்தின் ஒருங்கிணைப்பு தீர்வுகளை எளிதாக்கும் என அவர் தெரிவித்தார். 'Next Generation Reforms' நோக்கமாகக் கொண்டு, ஷ்ரம் சுவிதா, சமாதான் ஆகிய இணையதளங்களின் செயல்பாடுகளை எளிதாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார். "வேகமாக மாறிவரும் தொழிலாளர் சந்தை, திறன் தேவைகள் மற்றும் கிடைக்கக்கூடிய வேலைப் பாத்திரங்களுக்கான திறந்த தரவுத்தளங்கள் மற்றும் வேலை-அறிவாளர்களை சாத்தியமான முதலாளிகள் மற்றும் திறன் வழங்குநர்களுடன் இணைக்கும் வழிமுறை ஆகியவை இந்த சேவைகளில் உள்ளடக்கப்படும்" என்று அவர் பாராளுமன்றத்தில் தனது உரையில் மேலும் கூறினார்.
இ-ஷ்ரம் தளத்தின் ஒருங்கிணைப்பு
In #LabourReforms, Union Budget 2024-25 proposes: 👉 e-shram portal to be integrated with other portals to provide one-stop labour services solution; will include mechanism to connect job-seekers with potential employers and skill providers#Budget2024 #BudgetForViksitBharat pic.twitter.com/UHf9I6yr1q— Ministry of Finance (@FinMinIndia) July 23, 2024
இ-ஷ்ரம் போர்டல் என்றால் என்ன?
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் உட்பட அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளமாக 2021இல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் e-SHRAM போர்ட்டலை அறிமுகப்படுத்தியது. அரசாங்கத்தால் பகிரப்பட்ட விவரங்களின்படி, E-Shram போர்டல் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே போர்ட்டலில் பதிவு செய்துகொள்ள சுய அறிவிப்பு அடிப்படையில் அனுமதிக்கிறது. இந்த போர்ட்டலில் வேலை தேடுபவர்கள் பல்வேறு பயிற்சிகளையும் பெறலாம். இந்த போர்டல் 30 பரந்த தொழில் துறைகளில் 400 தொழில்களை ஆதரிக்கிறது. கூடுதலாக, அத்தகைய தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை வழங்குவதற்கும் இந்த போர்டல் பயன்படுத்தப்படுகிறது. இ-ஷ்ரம் போர்ட்டலை உமாங் ஆப், தேசிய அரசு சேவைகள் போர்டல் மற்றும் eshram.gov.in மூலம் அணுகலாம்.