Page Loader
ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை உருவாக்கம் - முக்கிய நோக்கம் என்ன?
ஆசியாவின் மிகப்பெரிய ஜோஜிலா சுரங்கபாதை உருவாக்கப்பட்டு வருகிறது

ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை உருவாக்கம் - முக்கிய நோக்கம் என்ன?

எழுதியவர் Siranjeevi
Apr 10, 2023
05:25 pm

செய்தி முன்னோட்டம்

ஆசியாவிலேயே மிக உயரமாக ஜோஜிலா சுரங்கப்பாதையானது, அடல் சுரங்கப்பாதைக்கு பதிலாக நீளமாக உருவாக தயாராக உள்ளது. 13 கிமீ நீளம் உடைய இந்த சுரங்க பாதையானது வலிமை கொண்ட சோஜிலா கணவாய்க்கு பதிலாக அனைத்து வானிலைக்கும் ஏற்ற சாலையாக மாறும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இதனை, இன்று ஏப்ரல் 10 ஆம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைக்கிறார். மேலும் இந்த சுரங்கப்பாதையை 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். முக்கியமாக இந்த சுரங்க பாதை, கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டாலை காஷ்மீரில் உள்ள டிராஸுடன் இணைக்கும் மற்றும் பயண நேரத்தை ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக குறைக்கும் எனக்கூறப்படுகிறது. ஜோஜிலா சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஆசியாவின் மிகப்பெரிய சுரங்கப் பாதை உருவாக்கப்பட்டு வருகின்றன