Page Loader
வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? - எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம்
வந்தே பாரத் ரயிலுக்கு இந்தி ஓட்டுநர்களை பணியமர்த்துவது கண்டிக்கத்தக்கது சு. வெங்கடேசன்

வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? - எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம்

எழுதியவர் Siranjeevi
Apr 03, 2023
05:45 pm

செய்தி முன்னோட்டம்

வந்தே பாரத் ரயிலுக்கு வட இந்திய ஓட்டுநர்களை மட்டுமே பணிக்கு நியமிப்பதற்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணிநியமிக்க ரயில் துறை நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. இதனால், இந்தி தெரியாத சீனியர் லோகோ பைலட்கள் உடனடியாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த முடிவு கண்டிக்கத்தக்கது எனவும், இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்யவேண்டும் எனவும் மதுரை எம்பி சு. வெங்கடேசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்க என ட்விட்டரில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

வந்தே பாரத் ரயிலா? வந்தே "இந்தி" ரயிலா? எம்பி சு. வெங்கடேசன் கண்டனம்