இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சிறப்பான ஹைபிரிட் கார்கள்?
செய்தி முன்னோட்டம்
இன்றைய நிலையில் முழுமையான எலெட்ரிக் வாகனங்களை வாங்குவதை விட, எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல்/டீசல் ஹைபிரிட் கார்களை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த ஹைபிரிட் கார்கள் இதோ.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்:
ரூ.16.21 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையுடன் இந்தியாவின் விலை குறைந்த ஹைபிரிட் காராக வலம் வருகிறது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரடரின் 'S ஹைபிரிட்' வேரியன்ட்.
மாருதி சுஸூகி கிராண்டு விட்டாரா:
தங்களுடைய கிராண்டு விட்டாரா லைன்-அப்பில் 'ஸெட்டா ப்ளஸ் ஹைபிரிட் CVT DT' வேரியன்டை ஒரு வலிமையான ஹைபிரிட் ஆப்ஷனாக வழங்குகிறது மாருதி. இந்தியாவில் ரூ.18.45 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த கிராண்டு விட்டாரா ஹைபிரிட்.
ஹைபிரிட் கார்கள்
ஹோண்டா சிட்டி e:HEV:
ICE இன்ஜினுடனேயே வாடிக்கையாளர்களின் மனதைக் கொள்ளையடிக்கும் சிட்டி மாடலின் ஹைபிரிட் வேரியன்ட், வாடிக்கையாளர்களுக்கு செடானில் ஒரு ஹைபிரிட் தேர்வாக இருக்கிறது. ரூ.18.89 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த 'சிட்டி e:HEV'.
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்:
MPV செக்மண்டில் டொயோட்டாவின் ஹைபிரிட் ஆப்ஷன் இது. ரூ.25.03 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகும் இந்த இன்னோவா ஹைகிராஸானது, இடவசதியுள்ள கார் மாடல்களில் ஹைபிரிட் வசதியை எதிர்பார்ப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
டொயேட்டா கேம்ரி ஹைபிரிட்:
செடான் சென்மண்டில் டொயோட்டாவின் மற்றொரு ஹைபிரிட் கார் இது, ஆனால் விலை தான் கொஞ்சம் அதிகம். ரூ.45.71 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த கேம்ரி ஹைபிரிட்.