
இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட 'ட்ரைம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள்' லைன்அப்
செய்தி முன்னோட்டம்
அப்டேட் செய்யப்பட்ட ஸ்ட்ரீட் ட்ரிபிள் லைன்அப் பைக்குகளை ட்ரையம்ப் நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அந்த பைக்குகளை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப்.
R மற்றும் RS ஆகிய இரண்டு வேரியன்ட்களையும் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப். இரண்டு பைக்குகளிலும் சற்றே மறுவடிவம் செய்யப்பட்ட சேஸியைப் பயன்படுத்தியிருக்கும் நிலையில், வீல்பேஸின் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது.
ட்ராக்கையும் மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் RS வேரியன்ட்டில் சற்றே கூடுதல் உயரம் கொண்ட சப்-ஃபிரேம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
முன்னர் பைரெல்லி டியாபுளோ ரோஸ்ஸோ III டயர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய அப்டேட் செய்யப்பட்ட மாடலில் கான்டினென்டல் கான்டிரோடு டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
ட்ரையம்ப்
ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் R மற்றும் RS: இன்ஜின் மற்றும் விலை
இரண்டு பைக்குகளிலும், மூன்று சிலிண்டர்கள் கொண்ட லிக்விட்-கூல்டு 765சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இன்ஜின் சற்றே மேம்படுத்தப்பட்டிருப்பதால், முன்பை விட கூடுதல் பவரை உற்பத்தி செய்கின்றன. R வேரின்டின் இன்ஜின் 120hp பவரையும், RS வேரியன்டின் இன்ஜின் 130hp பவரையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. டார்க், முன்பிருந்த அதே 80Nm தான்.
இந்தியாவில் R வேரியன்ட்டானது ரூ.10.17 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், RS வேரியன்ட்டானது ரூ.11.81 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியாகியிருக்கிறது.
இந்த ஸ்ட்ரீட் ட்ரிபிள் லைன்அப்பானது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் கவாஸாகி Z900 மற்றும் டுகாட்டி மான்ஸ்டர் லைன்அப்புக்குப் போட்டியாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.