
இந்த செப்டம்பரில் இந்தியாவில் வெளியாகவிருக்கும் பைக்குகள்
செய்தி முன்னோட்டம்
கடந்த இரு மாதங்களிலும் பல புதிய ப்ரீமியம் பைக்குகளின் வெளியீடுகளைக் கண்டது இந்திய இருசக்கர வாகனச் சந்தை. கடந்த மாதங்களைப் போலவே இந்த மாதமும் சில புதிய பைக்குகள் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு தான் தங்களுடைய புதிய புல்லட் 350 பைக்கை வெளியிட்டது ராயல் என்ஃபீல்டு. அடுத்து வெளியாகவிருக்கும் பைக்குகள் என்னென்ன?
சுஸூகி V-ஸ்ட்ராம் 800DE:
கடந்தாண்டு EICMA-வில் அறிமுகப்படுத்திய V-ஸ்ட்ராம் 800DE பைக்கை இந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது சுஸூகி.
776சிசி பேரலல் ட்வின் இன்ஜின் கொண்ட இந்த பைக்கை சில காலமாகவே இந்திய சாலைகளில் அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. பல நவீன வசதிகளுடன் இந்தியாவில் இந்த பைக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைக்
டிவிஎஸ் அப்பாச்சி RTR 310:
RR 310ன் நேக்கட் வெர்ஷனாக, RTR 310ஐ அடுத்த சில நாட்களில் இந்தியாவில் வெளியிடவிருக்கிறது டிவிஎஸ். 33hp பவர் மற்றும் 27.3Nm டார்க்கைக் கொண்ட 313சிசி இன்ஜினைப் பெறவிருக்கிறது RTR 310.
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், அலாய் வீல்கள் மற்றும் USD ஃபோர்க்குடன் ரூ.2.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த RTR 310 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேடிஎம் 390 டியூக்:
44.8hp பவர் மற்றும் 39Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 399சிசி இன்ஜினுடன் அப்டேட் செய்யப்பட்ட புதிய நேக்கட் 390 டியூக் பைக்கை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது கேடிஎம். TFT டிஸ்பிளேவுடன் கூடிய அப்டேட் செய்யப்பட்ட மாடலை இந்த மாதம் அந்நிறுவனம் வெளியிடவிருக்கிறது.