இந்தியாவில் வெளியானது புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஸ்ட்ரீட் நேக்கட் பைக்
இந்தியாவில் தங்களது புதிய அப்பாச்சி RTR 310 ஸ்ட்ரீட் நேக்கட் மாடல் ப்ரீமியம் பைக்கை வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ். இந்தியாவில் ஏற்கனவே டிவிஎஸ் விற்பனை செய்து வரும் RR 310 மாடலின் அப்டேட்ட வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது இந்த RTR 310 மாடல். புதிய RTR 310ல் ஸ்பிளிட் எல்இடி முகப்பு விளக்குடன், சிக்னேச்சர் DRLகளைக் கொடுத்திருக்கிறது டிவிஎஸ். பல்வேறு வசதிகள் மற்றும் பல்வேறு வகைகளிலான கணெக்டிவிட்டி வசதியுடன் கூடிய 5 இன்ச் TFT டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது. RR 310ஐ போலவே 'பில்ட்-டூ-ஆர்டர்' முறையில் புதிய RTR 310ஐயும் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது டிவிஎஸ். இந்தியாவில், கேடிஎம் 390 டியூக், ஹோண்டா CB300R மற்றும் BMW G310R பைக்குகளுக்குப் போட்டியாக களமிறங்கியிருக்கிறது புதிய RTR 310.
டிவிஎஸ் RTR 310: இன்ஜின் மற்றும் விலை
36hp பவர் மற்றும் 28.7Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 312.12சிசி இன்ஜினைப் பெற்றிருக்கிறது புதிய RTR 310. அதிகபட்சமாக 150 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய இந்த பைக்கானது, 0-60 கிமீ வேகத்தை 2.81 நொடிகளில் எட்டிப் பிடிக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. புதிய RTR 310ல் பாதுகாப்பிற்காக, கார்னரிங் ABS, கார்னரிங் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் ட்ராக்ஷன் கண்ட்ரோல் ஆகிய வசதிகளை அளித்திருக்கிறது டிவிஎஸ். இத்துடன் க்விக்ஷிப்டன், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் க்விக்ஷிப்டர் இல்லாமல் ரூ.2.43 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், க்விக்ஷிப்டருடன் ரூ.2.57 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியாகியிருக்கிறது புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 310.