ட்ரையம்ஃப் ஸ்பீட் ட்ரிபிள் 1200 RX லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்; விலை ₹23.07 லட்சம்
செய்தி முன்னோட்டம்
பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ட்ரையம்ஃப் (Triumph), பிரத்யேகமான ஸ்பீட் ட்ரிபிள் 1200 RX பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஷோரூம் விலை ₹23.07 லட்சம் ஆகும். உலகளவில் வெறும் 1,200 யூனிட்டுகளுக்கு மட்டுமே உற்பத்தி வரையறுக்கப்பட்டுள்ள இந்த பிரீமியம் மோட்டார்சைக்கிள், இந்தியச் சந்தைக்கு எத்தனை யூனிட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. லிமிடெட் எடிஷனான RX மாடல், நிலையான ஸ்பீட் ட்ரிபிள் 1200 RS மாடலின் அதே உயர் செயல்திறன் கொண்ட என்ஜினைக் கொண்டுள்ளது. இதில் 1,163சிசி இன்லைன்-3 லிக்விட்-கூல்டு எஞ்சின் உள்ளது. இது 10,750 ஆர்பிஎம்மில் 180 hp சக்தியையும், 8,750 ஆர்பிஎம்மில் 128 Nm டார்க்கையும் வழங்குகிறது. இது ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
லிமிடெட் எடிசனின் முக்கிய அம்சங்கள்
RS மாடலைப் போலவே இருந்தாலும், 1200 RX பல தனித்துவமான ஒப்பனை மற்றும் ஹார்டுவேர் மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. இதில் கவனிக்கத்தக்க வகையில், தனித்துவமான இரண்டு வண்ண மஞ்சள் மற்றும் கருப்பு நிறத் திட்டம் மற்றும் RX கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குறைந்த செட் கிளிப்-ஆன் ஹேண்டில்பார்கள், ஓட்டுநருக்கு ஆக்ரோஷமான நிலைப்பாட்டைக் கொடுத்துள்ளன. மேலும், பின் இருக்கை கால் வைக்கும் இடங்களும் (footpegs) சற்று உயர்த்தப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் அமைப்பு, உயர்-ஸ்பெக் கொண்ட பிரெம்போ ஸ்டைலெமா காலிப்பர்களைக் கொண்டுள்ளது. கையாளுமைத் துல்லியத்தை மேம்படுத்த, மேம்பட்ட ஓலின்ஸ் ஸ்மார்ட் EC 3.0 ஆக்டிவ் சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் ஓலின்ஸ் ஸ்டீயரிங் டாம்பர் ஆகியவை தொடர்ந்து இதில் இடம்பெற்றுள்ளன.