
'ஹார்லி-டேவிட்சன் X350'-க்குப் போட்டியாக இந்தியாவில் விற்பனையாகி வரும் பைக்குகள்!
செய்தி முன்னோட்டம்
கடந்த மாதம் இந்தியாவில் தங்களது புதிய 'X350' மாடல் பைக்கை அறிமுகப்படுத்தியது ஹார்லி-டேவிட்சன். ரூ.2.5 லட்சம் விலையில் இந்த பைக் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்குக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனையாகி வரும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350:
5-ஸ்பீடு கியர்பாக்ஸூடன், 20.1hp பவர் மற்றும் 27Nm டார்க்கை வெளிப்படுத்தும் 349சிசி இன்ஜினைக் கொண்டிருக்கிறது மீட்டியார்.
ரூ.2.01 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஜாவா 42 பாபர்:
6-ஸ்பீடு கியர்பாக்ஸூடன், 30.2hp பவர் மற்றும் 32.74Nm டார்க்கை உற்பத்தி செய்து 334சிசி இன்ஜினைக் கொண்டிருக்கிறது ஜாவா 42.
ரூ.2.07 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த பைக்.
ஹார்லி-டேவிட்சன்
யெஸ்டி அட்வென்சர்:
6-ஸ்பீடு கியர்பாக்ஸூடன் கூடிய, 29.8hp பவர் மற்றும் 29.9Nm டார்க்கை வெளிப்படுத்தும் 334சிசி இன்ஜினைப் பெற்றிருக்கிறது யெஸ்டி அட்வென்சர்.
ரூ.2.13 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படு வருகிறது இந்த யெஸ்டி அட்வென்சர்.
ஹோண்டா ஹைனஸ் CB350RS:
5-ஸ்பீடு கியர்பாக்ஸூடன், 20.7hp பவர் மற்றும் 30Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 348.36சிசி இன்ஜினைக் கொண்டிருக்கிறது ஹோண்டா ஹைனஸ்.
ரூ.2.15 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஹைனஸ்.
பஜாஜ் டாமினார் 400:
6-ஸ்பீடு கியர்பாக்ஸூடன், 39.4hp பவர் மற்றும் 35Nm டார்க்கை வெளிப்படுத்தக் கூடிய 373.3சிசி இன்ஜினைக் கொண்டிருக்கிறது டாமினார்.
ரூ.2.25 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது டாமினார் 400.