செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போகிறீர்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
ஆன்லைன் பரிவர்த்தனையை தவிர்க்கவும்: செகண்ட் ஹேண்ட் வாகனம் வாங்கும் பொழுது, ஆன்லைன் மூலம் தேர்வு செய்வதை தவிர்க்கவும். இதில் பல ஏமாற்று வேலைகள் நடக்கிறது. ஆன்லைனில் ஒரு புகைப்படத்தைப் போட்டு, வேறு காரை விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. இதனால் வாகனத்தை நேரடியாக கண்டு, சரி பார்த்த பிறகு பணத்தைச் செலுத்தவும்.
காரின் இன்ஜின்: காரின் தரத்தை அதன் இன்ஜின் செயல்பாடுதான் நிர்ணயிக்கும். அதனால் கார் வாங்கும் போது, தெரிந்த மெக்கானிக்கை அழைத்து சென்று, என்ஜின் தரத்தை அறிந்து வாங்குவது சாலச்சிறந்தது.
சர்வீஸ் வரலாறு: முறையாக கார்-ஐ சர்வீஸ் செய்துள்ளனரா எனபதை கவனமாக பார்க்கவேண்டும். முறையான சர்வீஸ் ஹிஸ்டரி இல்லை என்றால் வாகனத்தில் பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் தெரிந்து கொள்ள
செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும் குறிப்புகள்
ரசீது (Challan) சோதனை: வாங்க போகும் கார், ஏதேனும் சாலை விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதா என பரிசோதிக்க வேண்டும். குறிப்பிட்ட வாகனத்திற்கு ஏதாவது ரசீது பாக்கி இருக்கிறதா என்பதை ஆன்லைனில் செக் செய்து கொள்ள வேண்டும். இருப்பின், நிலுவையில் இருக்கும் அபராதத்தை கட்டிய பிறகே, காரை வாங்க வேண்டும்.
இன்சூரனஸ் சோதனை: வாங்கவிருக்கும் கார் பதிவுசெய்யப்பட்ட இன்சூரனஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு காரின் இன்சூரன்ஸ் கிளைம் ஹிஸ்டரியை பரிசீலித்த பின்னர், கார் வாங்கவும்.
ரெஜிஸ்டரேஷன் செர்டிபிகேட்: காரின் RC புக்கின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும். வண்டி நம்பர், சாஸ்ஸிஸ் நம்பர், வண்டியின் உரிமையாளர் பெயர் அனைத்தையும் சரி பார்க்க வேண்டும்.