செல்ப் டிரைவிங் அம்சத்ததால் உயிரிழந்த டெஸ்லா ஊழியர்
2022 ஆம் ஆண்டில், டெஸ்லா ஊழியரும் எலோன் மஸ்க் ரசிகருமான ஹான்ஸ் வான் ஓஹைன், அவரது மாடல் 3 கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் பரிதாபமாக உயிரிழ்ந்தார். அந்த சிக்கி விபத்தில் உயிர் பிழைத்த எரிக் ரோசிட்டர் என்பவர் அந்த விபத்தின் போது முழு செல்ப் டிரைவிங்(FSD) அம்சம் செயலில் இருந்ததாக தெரிவித்துள்ளார். அவர் கூறுவது உண்மையாக இருந்தால், முழு செல்ப் டிரைவிங்(FSD) அம்சத்தால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். வான் ஓஹைனின் காரில் FSD இருந்ததை வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அவர் டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர் என்பதால் அவருக்கு அந்த அம்சம் இலவசமாக கிடைத்தது என்று கூறப்படுகிறது.
ஆட்டோ பைலட்டால் ஏற்பட்ட இறப்புகள்
முழுமையான செல்ப் டிரைவிங் அம்சத்தை கொண்ட டெஸ்லா வாகனங்கள் எதுவும் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை. டெஸ்லா வாகனங்களில் செல்ப் டிரைவிங் அம்சம் இருந்தாலும், ஓட்டுநர்கள் அவ்வபோது காரை வழி நடத்த வேண்டிய நிலைமை தற்போது இருக்கிறது. டெஸ்லாவின் தானியக்க பைலட் அமசத்தால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் ஏற்கனவே இது குறித்து விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு, வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் டெஸ்லாவின் ஆட்டோபைலட் பயன்முறையை உள்ளடக்கிய அபாயகரமான விபத்துக்கள் 2019 முதல் அதிகரித்துள்ளன.