பிப்ரவரி 14ஆம் தேதி அறிமுகமாகிறது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஸ்கோடா ஆக்டேவியா
ஸ்கோடா நிறுவனம், பிப்ரவரி 14 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட ஆக்டேவியாவை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. புதுப்பிக்கப்பட்ட ஆக்டேவியா புதிய பம்ப்பர்கள், புதுப்பிக்கப்பட்ட முன் கிரில் மற்றும் நவீன ஹெட்லைட்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். புதிய மாடல் வெளியானாலும், ஸ்போர்ட்லைன் மற்றும் உயர்நிலை RS பதிப்புகள் இனியும் கிடைக்கும் என்று ஸ்கோடா நிறுவனம் உறுதியளித்துள்ளது. பவர்டிரெய்ன்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றாலும், முன்பு வெளியான 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் டர்போ டீசல் மற்றும் மைல்ட்-ஹைப்ரிட் ஆப்ஷன்கள் மீண்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஆக்டேவியா EV எப்போது வெளியாகும்?
ஃபேஸ்லிஃப்ட் மாடலைத் தவிர, எலக்ட்ரிக் ஆக்டேவியாவையும் ஸ்கோடா உருவாக்கி வருகிறது. இது இந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் அறிமுகமாகும். 89kWh பேட்டரியைக் கொண்டிருக்கும்இந்த ஸ்கோடா EVயில், WLTP ரேஞ்ச் 600km மற்றும் 200kW வரை சார்ஜிங் ரேட் இருக்கும். 20 ஆண்டுகால வரலாற்றில் 100,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ள ஆக்டேவியா(ஃபேஸ்லிஃப்ட்) இந்தியாவில் வெளியாகுமா என்பது குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. இதன் விற்பனை ஏப்ரல் 2023 இல் இந்தியாவில் நிறுத்தப்பட்டது. சமீபத்தில் முடிவடைந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில், ஸ்கோடா ENYAQ iV ஐ வெளியிட்டது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அது இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கும் முதல் முழு மின்சார மாடல் இதுவாகும்.