
இந்தியாவில் புதிய கோடியக் லவுஞ்ச் வேரியண்ட்டை அறிமுகம் செய்தது ஸ்கோடா நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது கோடியக் எஸ்யூவி வரிசையில், கோடியக் லவுஞ்ச் என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ₹39.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் எல்&கே மாடல்களை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. முக்கியமான மாற்றமாக, இந்த புதிய வேரியண்ட் 5-சீட்டர் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, விலை குறைப்புடன், சில கூடுதல் அம்சங்கள் நீக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோடியக் லவுஞ்ச் மாடலில் 18-இன்ச் மாஸினோ அலாய் வீல்கள் உள்ளன. இது மூன் ஒயிட், மேஜிக் பிளாக் மற்றும் கிராஃபைட் கிரே ஆகிய மூன்று வண்ணங்களில் மட்டுமே கிடைக்கிறது.
முக்கிய அம்சங்கள்
புதிய மாடலின் முக்கிய அம்சங்கள்
உயர்ந்த மாடல்களை விட இந்த லவுஞ்ச் வேரியண்டில் சில அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் 360 டிகிரி கேமரா, இன்டெலிஜென்ட் பார்க் அசிஸ்ட் மற்றும் கேன்டன் மியூசிக் சிஸ்டம் போன்றவை இல்லை. மாறாக, இதில் 10.4-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 9-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாடல் 5-சீட்டர் என்பதால், மூன்றாவது வரிசை இருக்கைகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் உட்புறம் சாம்பல் மற்றும் ஃபாக்ஸ்-சூட் தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ஜினைப் பொறுத்தவரை, கோடியக் லவுஞ்ச் மாடல் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 7-ஸ்பீட் டிஎஸ்ஜி கியர்பாக்ஸுடன் வருகிறது. இந்த என்ஜின் 201 ஹெச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது குறைந்த விலையிலும் அதே செயல்திறனையும் வாகனத்திற்கு வழங்குகிறது.