ஜனவரி சலுகை: மாதம் ரூ.65,000 வரை தள்ளுபடி விலையில் டாடா கார்கள்
இந்தியாவின் உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், இந்த ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரொக்க தள்ளுபடிகளாக கிட்டத்தட்ட ரூ. 65,000 வரை சலுகைகளை தந்துள்ளது, டாடா மோட்டார்ஸ். மக்களிடம் இந்த சலுகையை கொண்டு சேர்க்கும் விதமாக, சில புதிய அறிமுக மாடல்களுக்கும் தள்ளுபடி அறிவித்துள்ளது, இந்நிறுவனம். அவற்றின் விவரம், கீழே: டாடா டியாகோ: ரூ. 40,000 வரை தள்ளுபடியுடன் விற்பனைக்கு உள்ளது. இந்த ஐந்து இருக்கைகள் கொண்ட காரில், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 7.0-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ஈபிடி ஆகியவை உள்ளன.
டாடா கார்கள் தள்ளுபடியில் விற்பனை
டாடா டிகோர்: ரூ.45,000 மதிப்புள்ள சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காம்பாக்ட் செடான் வகை காரான டிகோர், 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் ரெவோட்ரான் எஞ்சினில் இரண்டு ட்யூன்களில் இயங்குகிறது. டாடா ஹாரியர்: இந்த ஜனவரி மாதம் மட்டும், ரூ.65,000 மதிப்புள்ள சலுகைகளை பெறுகிறது இந்த ஹாரியர். நடுத்தர அளவிலான SUV வகை காரான இந்த ஹாரியர், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டாடா சபாரி: ரூ.65,000 வரை தள்ளுபடியுடன் விற்கப்படுகிறது. ஆறு/ஏழு இருக்கைகள் கொண்ட டாடா சபாரி, 2.0-லிட்டர் Kryotec டர்போ-டீசல் எஞ்சின் மூலம் இயங்குகிறது. இந்திய சந்தையில், முதல் மூன்று பெரிய வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், பாதுகாப்பான கார்களை உருவாக்குவதில் பெயர் பெற்றது.