
குளிர்காலத்தில் எளிதாக வாகனம் ஓட்ட, டிரைவிங் டிப்ஸ்- பகுதி 4
செய்தி முன்னோட்டம்
குளிர்காலம் நாட்டின் பல ஊர்களில் தீவிரமாக உள்ளது. குளிர்காலத்தின் மிகவும் முக்கியமான ஒன்று பனிமூட்டம்.
வாகனஓட்டிகளுக்கு மிகவும் சோதனையான விஷயம் இந்த பனிமூட்டம் தான். எதிர்வரும் வாகனங்களோ, ரோடுகளோ, சரிவர தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிறைந்துள்ளது.
இதனால் பல விபத்துகள் நேர்கிறது. குறிப்பாக இந்தியாவின் பல தென் மாநிலங்களிலும் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு வருகிறது.
இத்தகைய சூழ்நிலைகளில் பாதுகாப்பாக எப்படி வாகனத்தை ஓட்டுவது என்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ
card 2
ரோடு சைன்ஸ் (Road Signs)
பனிமூட்டத்தில் வாகனம் ஓடும்போது, ரோடு சைன்ஸ் எனப்படும் சாலை அடையாளங்களில் கவனமாக இருங்கள்.
அதில் எதிர்வரும் பாதையில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய விஷயங்களை உணர்த்தும்.
அதேபோல, நீங்கள் சரியான பாதையில் தான் சென்றுகொண்டிருக்கீர்களா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.
இந்த போர்டுகளில் குறிப்பிடப்படும் போக்குவரத்து வழிமுறைகளை பின்பற்றி ஓட்டினால் விபத்துகளை தவிர்க்கலாம்.
card 3
வானிலை அப்டேட்
வானிலை முன்னறிவிப்புகள் குறித்து கவனமாக கண்காணிக்கவும்.
குறிப்பாக குளிர்கால மாதங்களில் மழை பெய்தால் கூடுதல் சிரமமாக இருக்கும்.
நீங்கள் செல்லும் ஊர்களிலும், செல்லும் வழியிலும் இது போன்ற வானிலை நிலவுகிறதா என்பதை முன்கூட்டியே கவனித்து, தேவையான முன்னெச்சிரிக்கைகளை எடுக்கவும்.
கூடுதலாக, மின்விளக்கு, முதலுதவி பொருட்கள் மற்றும் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட எமர்ஜென்சி கிட் உங்கள் வாகனத்தில் எப்பொழுதும் வைத்திருப்பதை உறுதிசெய்யவும். அவசரகாலத்தில் அது உங்களுக்கு உதவும்.