ரூ.3 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரோட்ஸ்டர்கள்
ஸ்பீடு 400 மற்றும் X440 ஆகிய பைக்குகளின் வரவு, இந்திய பைக் வாடிக்கையாளர்களின் பார்வையை மீண்டும் எண்ட்ரி-லெவல் ரோட்ஸ்டர்கள் பக்கம் திருப்பியிருக்கிறது. இந்தியாவில் தற்போது ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனையாகி வரும் ரோட்ஸ்டர் மாடல் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம். ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350: இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரோட்ஸ்டர் என்றால் அது ஹண்டர் 350 தான். 349.3சிசி இன்ஜினைப் பெற்றிருக்கும் இந்த பைக்கானது, ரூ.1.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. யெஸ்டி ரோட்ஸ்டர்: 334சிசி இன்ஜினைக் கொண்ட தங்களுடைய மாடர்ன் ரோட்ஸ்டரை கடந்தாண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது யெஸ்டி. இந்த பைக்கானது ரூ.2.03 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஹார்லி டேவிட்சன் X440:
உலகளவில் தங்களுடைய லைன்-அப்பிலேயே மிகவும் சிறிய இன்ஜின் கொண்ட பைக்காக இந்தியாவிற்கான புதிய X440 ரோட்ஸ்டரை, ஹீரோவுடன் கூட்டணி அமைத்து ரூ.2.29 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் சில வாரங்களுக்கு முன்பு தான் அறிமுகப்படுத்தியது ஹார்லி டேவிட்சன். ட்ரையம்ப் ஸ்பீடு 400: ஹார்லியைப் போல பஜாஜூடன் கூட்டணி அமைத்து தங்களது குறைந்த விலை ரோட்ஸ்டரான ஸ்பீடு 400 பைக்கை, ரூ.2.33 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியிட்டது ட்ரையம்ப். ஹோண்டா CB300R: இந்தப் பட்டியலிலேயே அதிக விலை கொண்ட ரோட்ஸ்டராக ரூ.2.77 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது ஹோண்டாவின் CB300R. ஹோண்டாவின் ப்ரீமியமான டிசனைக் கொண்டிருக்கும் இந்த பைக்கானது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.