நான்கு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலக்குகள்
நான்கு சக்கர வாகனங்களின் காப்பீட்டுத் திட்டங்களில், தனிநபர் பயன்பாட்டு வாகனம் மற்றும் வணிகப் பயன்பாட்டு வாகனம் என இரண்டு வகைகள் இருக்கிறது. இந்த இரண்டு வகைகளிலும், என்னென்ன விலக்குகள் இருக்கின்றன என்பதை இப்போது பார்க்கலாம். தனிநபர் நான்கு சக்கர வாகன காப்பீட்டு விலக்குகள்: தனிநபர் பயன்பாட்டிற்கான வாகனத்தை, வணிகப் பயன்பாடுகளுக்காக பயன்படுத்தி, அதன் மூலம் விபத்து அல்லது சேதம் ஏற்பட்டால், அதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்காது. வாகனத்தை ஓட்டுபவர்/உரிமையாளருக்கும் மட்டுமே விபத்து ஏற்பட்டால் காப்பீட்டைக் கோர முடியும். வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு அந்த வாகனத்திற்கா காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டைக் கோர முடியாது. வேறு நபர்கள் தொடர்ந்து உங்கள் வாகனத்தை இயக்குகிறார்கள் என்றால், அவர்களை கூடுதல் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
வணிகப் பயன்பாட்டிற்கான நான்கு சக்கர வாகன காப்பீட்டு விலக்குகள்:
வணிகப் பயன்பாட்டிற்கான வாகனத்தை தனிநபர் பயன்பாட்டிற்காக பயன்படுத்தி, அதன் மூலம் விபத்து அல்லது சேதம் ஏற்பட்டால், அதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்காது. வாகனங்களில் ஏற்படும் வழக்கமான பழுதுகளைச் சரிசெய்ய காப்பீட்டைக் கோர முடியாது. ஒரு வாகனத்தின் குறிப்பிட்ட அளவுகள் அல்லது விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்கி, அதனால் ஏற்படும் விபத்து மற்றும் சேதங்களுக்கும் காப்பீட்டைக் கோர முடியாது. ஒரு வணிகப் பயன்பாட்டிற்கான வாகனத்தை, அதன் காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓட்டுநர் மட்டுமே இயக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிடாத வேறு நபர்கள் வாகனத்தை இயக்கி அதனால் விபத்து அல்லது சேதம் ஏற்பட்டாலும் அந்தக் வாகனத்துக்கான காப்பீட்டைக் கோர முடியாது.