LOADING...
இந்தியாவின் ஆற்றல் தன்னிறைவு: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4680 பாரத்செல் பேட்டரியுடன் ஓலா S1 Pro+ விநியோகம் தொடக்கம்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4680 பாரத்செல் பேட்டரியுடன் ஓலா S1 Pro+ விநியோகம் தொடக்கம்

இந்தியாவின் ஆற்றல் தன்னிறைவு: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4680 பாரத்செல் பேட்டரியுடன் ஓலா S1 Pro+ விநியோகம் தொடக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 07, 2025
11:56 am

செய்தி முன்னோட்டம்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4680 பாரத் செல் பேட்டரி பேக்கைப் பயன்படுத்தும் தனது முதல் மின்சார ஸ்கூட்டரான S1 Pro+ (5.2kWh) இன் விநியோகத்தைத் தொடங்கியுள்ளது. இந்த நகர்வின் மூலம், பேட்டரி செல்கள் மற்றும் பேட்டரி பேக்குகளை முழுவதுமாகத் தயாரித்து, அதனை மின்சார வாகனங்களில் பயன்படுத்தும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை ஓலா எலக்ட்ரிக் பெறுகிறது. முழுக்க முழுக்கச் சொந்த வளங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தச் செல் தொழில்நுட்பம், ஓலா ஸ்கூட்டர்களுக்கு சிறந்த வரம்பு (Range), மேம்பட்ட செயல்திறன் மற்றும் அதிகரித்த பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தன்னிறைவு

இந்தியாவின் ஆற்றல் தன்னிறைவு

4680 பாரத் செல் கொண்ட வாகனங்களின் அறிமுகம், இந்தியாவின் ஆற்றல் தன்னிறைவை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ARAI தரச்சான்றிதழ் பெற்ற S1 Pro+ (5.2kWh) ஸ்கூட்டர், 13 kW மோட்டாரைக் கொண்டுள்ளது. இது வெறும் 2.1 வினாடிகளில் 0 முதல் 40கிமீ வேகத்தை அடைய முடியும். இந்த ஸ்கூட்டர் ஒரே சார்ஜில் 320கிமீ (IDC) பயண வரம்பை வழங்குகிறது. இதில் Hyper, Sports, Normal, மற்றும் Eco ஆகிய நான்கு ரைடிங் மோடுகளும், மேம்பட்ட பாதுகாப்பிற்காக இரட்டை ABS மற்றும் டிஸ்க் பிரேக்குகளும் உள்ளன. மேலும், இந்த ஸ்கூட்டரில் டூயல் டோன் சீட், அலுமினியம் கிராப் ஹேண்டில் போன்ற கூடுதல் அம்சங்களும் உள்ளன.