இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு நான்கு மெர்சிடிஸ் 'டாப்-எண்ட்' கார்களில் ஒன்று மின்சார கார்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் சொகுசு கார் சந்தையில் முன்னணியில் இருக்கும் மெர்சிடீஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம், மின்சார வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. தற்போது இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் 'டாப்-எண்ட்' ரக கார்களில், விற்பனையாகும் ஒவ்வொரு நான்கு கார்களில் ஒன்று மின்சார காராகும் (அதாவது 25% விற்பனை). ஆரம்ப நிலை சொகுசு கார்களை விட, அதிக விலை கொண்ட உயர்தர சொகுசு கார்களிலேயே (EQS போன்ற மாடல்கள்) வாடிக்கையாளர்கள் மின்சாரப் பதிப்பைத் தேர்ந்தெடுக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒட்டுமொத்த சொகுசு கார் சந்தையில் மின்சார வாகனங்களின் ஊடுருவல் கடந்த ஆண்டுகளில் 11%-லிருந்து தற்போது 20% முதல் 25% வரை உயர்ந்துள்ளது.
எலெக்ட்ரிக் கார்
ஏன் இந்த மாற்றம்?
மெர்சிடிஸ் மின்சார கார்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 700 கி.மீ-க்கும் மேல் செல்லும் திறன் கொண்டவை என்பதால், சார்ஜிங் குறித்த பயம் வாடிக்கையாளர்களிடம் குறைந்துள்ளது. 75% சொகுசு கார் வாடிக்கையாளர்கள் தங்களது வீடு அல்லது அலுவலகங்களிலேயே சார்ஜ் செய்துகொள்கின்றனர்; பொது சார்ஜிங் மையங்களை அவர்கள் அதிகம் நாடுவதில்லை. மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்படும் குறைந்த ஜிஎஸ்டி (5%) மற்றும் சாலை வரி விலக்குகள் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. மெர்சிடிஸ் நிறுவனம் 2026-ம் ஆண்டில் சுமார் 12 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் மின்சார வாகனங்கள் மற்றும் பெட்ரோல்/டீசல் வாகனங்கள் என இரண்டுமே அடங்கும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த மாற்றத்தை முன்னெடுப்பதாக சந்தோஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.