இந்த மே மாதம் கார் விற்பனையில் மஹிந்திராக்கு 31% வளர்ச்சி
உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, மே 2024 இல் 31% குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுளளதாக அறிவித்துள்ளது. மே 2024 இல் மட்டும் மஹிந்திரா மொத்தம் 44,283 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனையில் பெரும்பாலானவை உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவையாகும். உள்நாட்டில் மட்டும் 43,218 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வாகனங்களும் இந்த வெற்றியில் கணிசமான பங்கைக் கொண்டிருந்தன. உள்நாட்டில் வணிக வாகனங்களின் விற்பனை மொத்தம் 19,826 யூனிட்களாக இருந்தது. மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான XUV 3XO, இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.
இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த XUV 3XO
தற்போது, XUV 3XO இன் மிட்-ஸ்பெக் டிரிம்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. "மே மாதத்தில் நாங்கள் மொத்தம் 43,218 எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளோம், இது 31% வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டை விட 17% வளர்ச்சியாகும்." என்று மஹிந்திராவின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா கூறியுள்ளார். ஒரு மணி நேரத்திற்குள் முன்பதிவு 50,000 ஐ எட்டியதன் மூலம் XUV3XO க்கு அமோக வரவேற்பு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில், மஹிந்திரா XUV 3XOவுக்கு கியா சோனெட், மாருதி சுசுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் போன்ற போட்டியாளர்கள் உள்ளன. ரூ.10-13.5 லட்சம்(எக்ஸ்-ஷோரூம்) விலையில் XUV 3XO வகைகள் தற்போது விற்கப்படுகின்றன.