காம்பாக்ட் ரேங்லர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ஜீப்
பிரபலமான மஹிந்திரா தார்க்கு போட்டியாக புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஜீப் நிறுவனம். பல்வேறு உலகளாவிய சந்தைகளில் வெளியிடப்பட இருக்கும் இந்த வாகனம், மாருதி சுசுகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா போன்ற போட்டியாளர்களை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப்பின் காம்பஸ் மாடலுக்கு அடுத்தபடியாக இந்த புதிய மாடல் வெளியாக உள்ளது. எனவே, இந்தியாவில் வெளியாக இருக்கும் ஜீப்பின் நிறுவனத்தின் மிக மலிவான கார் இதுவாகும். ஜீப்பின் இந்த புதிய எஸ்யூவி ரேங்லர் மாடலை போன்ற கூறுகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குடும்பத் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட உள்ளது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
இந்த புதிய வாகனம் பாடி-ஆன்-ஃபிரேம் சேஸ்ஸை அடிப்படையாகக் கொண்டதாகும். இது பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆகிய வகைகளிலும் விறக்கப்பட இருக்கிறது. இதில் பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், நினைவக செயல்பாடு மற்றும் காற்றோட்டத்துடன் கூடிய பவர்-அட்ஜஸ்ட்டபிள் இருக்கைகள் மற்றும் டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இருக்கும். இந்த வாகனம் இரட்டை மண்டல தானியங்கி ஏசி மற்றும் மேம்பட்ட வசதிக்காக இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் 360-டிகிரி-வியூ கேமரா அமைப்புடன் கூடிய பாதுகாப்பு அமைப்புகளும் இதில் இருக்கும்