
டர்பன் நிறத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ்.. இணையத்தைக் கலக்கும் இந்தியர்!
செய்தி முன்னோட்டம்
உலகில் இருக்கும் பல கார் ஆர்வலர்களுக்கும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குவதே கனவாக இருக்கும் நிலையில், பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான ரியூபென் சிங் 15 ரோல்ஸ் ராய்ஸ் காரை தனது கராஜில் வைத்திருக்கிறாராம்.
சரி, யார் இந்த ரியூபென் சிங்?
1970-ல் இவரும் இவரது குடும்பத்தினரும் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்திருக்கின்றனர். தற்போது பிரிட்டனில் ஐஷர் கேபிடல்ஸ் என்ற தனியார் முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார் ரியூபென் சிங்.
மேலும், ஆல்டேபிஏ என்ற வாடிக்கையாளர் சேவை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் இவர். இவரை சில சமயம் பிரிட்டிஷ் பில் கேட்ஸ் என்றும் அழைப்பார்களாம்.
ரோல்ஸ் ராய்ஸ்
ரியூபென் சிங்கின் கார் கலெக்ஷன்:
சீக்கியரான இவர், தனது டர்பன் நிறத்திற்கேற்ப கார்களை வாங்கி தனது கராஜில் வைத்திருக்கிறார். சாதாரண கார் அல்ல, அனைத்தும் ரோல்ஸ் ராய்ஸ்.
கடந்த தீபாவளிக்கு மட்டும் ஐந்து நிறங்களில் ரோல் ராய்ஸை வாங்கி தன் கராஜில் சேர்த்திருக்கிறார் இவர்.
ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மட்டுமல்லாது, ரூ.3.22 கோடி மதிப்புடைய லம்போர்கினி ஹூராகேன், ரூ.12.95 கோடி தொடக்க விலை கொண்ட மிகவும் அரிய புகாட்டி வெர்யான், ஃபெராரி F12 பெர்லினட்டா, போர்ஷே 918 ஸ்பைடர் மற்றும் பகானி ஹ்யூரா என இவரது வைத்திருக்கும் கார்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அனைத்து கார்களும் அதிக விலை மதிப்பு கொண்ட லக்சரி ப்ரீமியம் வகையைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Rueben Singh vibes.. pic.twitter.com/Ce5nvLXrY5
— jap (@singhwhotweets) December 30, 2020