கார்களில் திருடுவதைத் தவிர்க்க புது முயற்சியை கையில் எடுத்த ஹூண்டாய், கியா நிறுவனங்கள்;
ஹுண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் தங்கள் தயாரித்த கார்களில் திருட்டு பிரச்சினை இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க சாஃப்ட்வேர்களை அப்டேட் செய்ய முடிவு செய்துள்ளது தென் கொரியாவை தலைமையிடத்தை கொண்டு இயங்கும் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை தயாரித்த கார்களில் 83 லட்சம் கார்களில் பாதுகாப்பை கொண்டுவர உள்ளது. இந்த இரண்டு நிறுவனத்துக்கும் தனித்தனியே போட்டிகள் இருந்தாலும், இரண்டிற்கும் இடையே முதலீட்டுத் தொடர்பு இருக்கிறது. எனவே, ஹூண்டாய் நிறுவனம் கியா நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவு பங்குகளை வைத்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் சமீபத்தில் வைரலான ஒரு டிக்டாக் வீடியோவில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை வெளிச்சம் போட்டி காட்டியுள்ளனர்.
வாகன திருட்டை தடுக்க ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் எடுத்த முடிவு
இதனால், திருடர்கள் சுலபமாக அந்த காரை திருடி விட முடியும் எனவும் விளக்கியிருந்தனர். இதனால், அதை டெஸ்ட் செய்து பார்த்த போது அது உண்மை எனத் தெரியவந்தது. இதனால் இந்த விஷயம் பெரும் விவாதத்திற்குள்ளானது. எனவே, அமெரிக்காவில் 2 முக்கியமான பெரிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் வழங்குவதைத் தற்காலிகமாகவே நிறுத்தினர். என்னசெய்வது என தெரியாமல் தற்போது ஹூண்டாய் நிறுவனம் ஒரு சிறிய சாஃப்ட்வேர் அப்டேட் செய்துவிட்டால் போதும் காரை திருடுவதைத் தடுக்க முடியும் எனத் தீர்வுக்கு வந்தனர். அதன்படி, இந்த சாஃப்ட்வேர் அப்டேட்டை இலவசமாகச் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளனர். ஹூண்டாய் நிறுவனம் 38 லட்சம் கார்களுக்கும், கியா நிறுவனம் 45 லட்சம் கார்களுக்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேட்டை செய்து கொடுக்க தயாராகிவிட்டது.