ஹூண்டாய் கார் வைத்திருப்பவர்களுக்கு மெகா ஆஃபர்: 30-பாயிண்ட் இலவச செக்-அப், 30% வரை அதிரடி தள்ளுபடி
செய்தி முன்னோட்டம்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, தனது 30 ஆண்டுகால சிறப்பான வணிகப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், நாடு தழுவிய அளவில் ஹூண்டாய் ஸ்மார்ட் கேர் கிளினிக் என்ற சிறப்பு சேவை முகாமை அறிவித்துள்ளது. வரும் ஜூன் 24 முதல் ஜூலை 8, 2026 வரை நடைபெறவிருக்கும் இந்த முகாமில், வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை இலவசமாகப் பரிசோதனை செய்து கொள்வதுடன், பல்வேறு கட்டண சலுகைகளையும் பெற முடியும்.
வாகன ஆரோக்கியம்
இலவச 30-பாயிண்ட் வாகன ஆரோக்கியப் பரிசோதனை
இந்தச் சிறப்பு முகாமின் முக்கிய அம்சமாக, ஹூண்டாய் காரின் இன்ஜின், பிரேக்குகள், எலக்ட்ரிக்கல் சிஸ்டம்கள் மற்றும் சஸ்பென்ஷன் உள்ளிட்ட மிக முக்கிய பாகங்களை உள்ளடக்கிய 30-பாயிண்ட் வாகன ஆரோக்கியப் பரிசோதனை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை மிகச் சிறந்த நிலையில் பராமரிப்பதற்கும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும் இந்த முகாம் ஒரு நல்ல வாய்ப்பாகும்.
தள்ளுபடி
வாரண்டி மற்றும் லேபர் கட்டணங்களில் 30% வரை மெகா தள்ளுபடி
இந்தியாவில் உள்ள 1,600க்கும் மேற்பட்ட ஹூண்டாய் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் இந்த சலுகைகள் கிடைக்கவுள்ளன. இந்த முகாம் காலத்தில் கார்களின் எக்ஸ்டெண்டட் வாரண்டி திட்டங்கள், மெக்கானிக்கல் லேபர் கட்டணங்கள், கார் கேர் சேவைகள் மற்றும் ரோடுசைடு அசிஸ்டன்ஸ் பேக்கேஜ்கள் ஆகியவற்றிற்கு 30 சதவீதம் வரை அதிரடி பலன்கள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சந்தா
உதிரிப் பாகங்கள் மற்றும் புளூலிங்க் சந்தாவிற்கு 10% சலுகை
இதுதவிர, காரின் மெக்கானிக்கல் மற்றும் வழக்கமான பராமரிப்பிற்குத் தேவைப்படும் அத்தியாவசிய உதிரிப் பாகங்களை வாங்குவதற்கும், ஹூண்டாய் காரின் பிரத்யேக கனெக்டெட் தொழில்நுட்பமான புளூலிங்க் சந்தா சேவைகளைப் புதுப்பிப்பதற்கும் 10 சதவீதத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள அதிகாரப்பூர்வ ஹூண்டாய் சர்வீஸ் சென்டரைத் தொடர்பு கொண்டு முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.
பருவமழை
பருவமழை காலத்திற்கு முந்தைய கச்சிதமான திட்டமிடல்
இந்தியாவில் விரைவில் தீவிரமடையவுள்ள தென்மேற்குப் பருவமழை காலத்தை மனதில் கொண்டே ஹூண்டாய் இந்த சேவை முகாமை கச்சிதமாகத் திட்டமிட்டுள்ளது. ஈரப்பதமான மற்றும் மழைக்காலச் சாலைகளில் காரை ஓட்டுவதற்கு முன்பாக, அதன் நம்பகத்தன்மை மற்றும் ஆயுட்காலத்தை அதிகரிக்க இத்தகைய வழக்கமான பராமரிப்புப் பணிகள் பெரிதும் உதவும் என்பதால், வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
30வது ஆண்டு
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் 30வது ஆண்டு மைல்கல்
இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் தேசிய சேவைப் பிரிவுத் தலைவர் நீலேஷ் ஷா பேசுகையில், இந்த ஸ்மார்ட் கேர் கிளினிக் முகாம் என்பது தங்களின் வாடிக்கையாளர்களுக்கே முதலிடம் என்ற கொள்கையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார். முன்கூட்டியே வாகனப் பராமரிப்பை வழங்குவதன் மூலமும், வெளிப்படையான சேவை அனுபவத்தை அளிப்பதன் மூலமும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதே 30வது ஆண்டு மைல்கல்லின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.