கார்களுக்கு இணையாக ஸ்மார்ட் கீ வசதியுடன் அறிமுகமான ஹோண்டா ஆக்டிவா 6ஜி
செய்தி முன்னோட்டம்
ஹோண்டா ஆக்டிவா 6ஜி 2023 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்கூட்டரில் ஹோண்டா ஸ்மார்ட் கீ தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருப்பதுதான் சிறப்பு அம்சமே.
இந்த தொழில்நுட்ப, வசதியை ஹோண்டா நிறுவனம் முதல் முறையாக வழங்கியுள்ளது.
இந்த ஸ்கூட்டர் மொத்த 3 வேரிண்ட்களில் கிடைக்கும். ஸ்டாண்டர்டு (Standard), டீலக்ஸ் (Deluxe) மற்றும் (Smart) ஆகியவை ஆகும்.
ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் விலை 74,536 ரூபாயாகவும், டீலக்ஸ் வேரியண்ட்டின் விலை 77,036 ரூபாகவும், ஸ்மார்ட் வேரியண்ட்டின் விலை 80,537 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் வேரியண்ட்டில் தான் ஹோண்டா ஸ்மார்ட் கீ வசதி வழங்கப்பட்டுள்ளது.
அதில் பிஸிக்கல் கீ இல்லாமலேயே, ஹேண்டில் பாரை லாக் மற்றும் அன்லாக் செய்வதற்கு இது உதவி செய்கிறது.
ஹோண்டா வேரியண்ட்கள்
ஹோண்டா ஆக்டிவா 3 வேரியண்ட்களின் விலை என்ன?
அத்தோடு, இருக்கையை திறந்து, மூடுவது மற்றும் எரிபொருள் டேங்க் மூடியை திறந்து, மூடுவது ஆகியவற்றையும் 'பிஸிக்கல் கீ' இல்லாமலேயே இதன் மூலமாக செய்ய முடியும்.
கார்களில் உள்ள 'கீலெஸ் எண்ட்ரி' வசதியை போன்று இது செயல்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த வசதியை பயன்படுத்த ஸ்மார்ட் கீ-யை பாக்கெட்டில் வைத்திருந்தால் மட்டும் போதுமானது.
மேலும், பார்க்கிங் ஏரியாவில், உங்கள் ஸ்கூட்டரை கண்டறிவதற்கும் இந்த ஸ்மார்ட் கீ உதவி செய்கிறது என கூறலாம்.
எனவே, ஹோண்டா நிறுவனம் ஸ்மார்ட் கீ வசதியுடன், 2023 ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை தற்போது அறிமுகம் செய்துள்ள நிலையில், இதற்கு அடுத்தபடியாக ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.