Page Loader
90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்!
1 கோடி கொடுத்து பேன்சி நம்பரை வாங்கி ஆச்சரியப்படுத்திய நபர்

90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்!

எழுதியவர் Siranjeevi
Feb 21, 2023
04:36 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் Rs. 1 கோடி ரூபாய் செலவழித்து பேன்சி நம்பர் வாங்கியுள்ளார். இமாச்சல பிரதேசம், சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்காய் நகரை சேர்ந்த நபர் ஒருவர் Rs. 90,000 மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ஸ்கூட்டருக்கு HP-99-9999 என்ற பேன்சி பதிவு எண்ணை பெறுவதற்காக சிம்லா ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் நடத்திய ஆன்லைன் ஏலத்தில் அந்த நபர் கலந்து கொண்டுள்ளார். அப்போது, HP 99-9999 என்ற உரிமத் தகடுக்கு 26 ஏலதாரர்கள் வரை போட்டியிட்ட நிலையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனத்தின் உரிமையாளர் இந்த பேன்சி பதிவு எண்ணை Rs.11,215,500 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்.

பேன்சி நம்பர்

1000 ரூபாய் மதிப்புடைய நம்பர் ப்ளேட்டை 1 கோடிக்கு வாங்கிய நபர்

அப்போது, HP 99-9999 என்ற உரிமத் தகடுக்கு 26 ஏலதாரர்கள் வரை போட்டியிட்ட நிலையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனத்தின் உரிமையாளர் இந்த பேன்சி பதிவு எண்ணை Rs.11,215,500 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார். அதாவது, 1.12 கோடி ரூபாய் வாங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். 1000 ரூபாய்க்கு தொடங்கிய பதிவு ஏலம் இறுதியில் Rs. 11,215,500 ரூபாய்க்கு நிறைவடைந்தது. இந்த நிலையில், இருசக்கர வாகனப் பதிவு எண்ணுக்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகை இது தான் என இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1 கோடி ரூபாய் வரை செலவழித்த வாங்கிய அந்த நபர் யார் என தகவல்கள் வெளியாகவில்லை.