Loading...
125cc பைக்ல இதெல்லாம் இருக்கா? TFT ஸ்கிரீனுடன் களம் இறங்கிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R ஸ்டெல்த் எடிஷன்
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R ஸ்டெல்த் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

125cc பைக்ல இதெல்லாம் இருக்கா? TFT ஸ்கிரீனுடன் களம் இறங்கிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R ஸ்டெல்த் எடிஷன்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 06, 2026
07:00 pm

செய்தி முன்னோட்டம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Xtreme 125R) மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டெல்த் எடிஷன் வேரியண்ட்டை இந்தியாவில் ₹1,16,250 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய எடிஷன் பிரத்யேக மிட்நைட் பிளாக் மற்றும் பேர்ல் ரெட் வண்ணக் கலவையிலும், சிவப்பு நிற அலாய் சக்கரங்கள் மற்றும் ரெட் கலர் டேங்க் எக்ஸ்டென்ஷன்களுடனும் மிகவும் ஆக்ரோஷமான ஸ்போர்ட்டி தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

4.2-இன்ச் TFT டிஸ்ப்ளே

4.2-இன்ச் TFT டிஸ்ப்ளே மற்றும் நவீன புளூடூத் இணைப்பு வசதிகள்

எக்ஸ்ட்ரீம் 125ஆர் வரிசையிலேயே முதன்முறையாக இந்த புதிய ஸ்டெல்த் எடிஷனில் 4.2-இன்ச் கலர் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

ஹீரோவின் ஸ்மார்ட்போன் செயலி மூலம் புளூடூத் வழியாக பைக்கை இணைப்பதன் மூலம், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் மற்றும் மியூசிக் கன்ட்ரோல் போன்ற பல நவீன வசதிகளை ஓட்டுநர்கள் எளிதாகப் பயன்படுத்த முடியும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பிரிவில் முதன்முறையாக TPMS வசதி மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்

125cc மோட்டார் சைக்கிள் பிரிவிலேயே முதன்முறையாக ரியல்-டைம் டயர் அழுத்தத்தைக் கண்காணிக்கும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் TPMS) இந்த பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

இத்துடன் டியூவல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரெயின், ரோட், ஸ்போர்ட் ஆகிய மூன்று ரைடிங் மோடுகளும் பைக்கின் பாதுகாப்பு மற்றும் ஓட்டுதல் அனுபவத்தை மேலும் பலப்படுத்துகின்றன.

ADVERTISEMENT

எஞ்சின் செயல்திறன்

மாற்றமில்லாத எஞ்சின் செயல்திறன் மற்றும் சந்தைப் போட்டியாளர்கள்

தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், பைக்கின் எஞ்சினில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

அதே 124.7 cc ஏர்-கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சின் 11.4 bhp ஆற்றலையும் 10.5 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

சந்தையில் டிவிஎஸ் ரைடர் மற்றும் ஹோண்டா சிபி125 ஹார்னெட் ஆகிய பைக்குகளுக்கு பலத்த போட்டியாக இந்த புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் ஸ்டெல்த் எடிஷன் களம் இறங்கியுள்ளது.

ADVERTISEMENT