எப்படி இருக்கிறது ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 200T 4V: ரிவ்யூ
எக்ஸ்பல்ஸ் 200T-யின் அப்டேட் செய்யப்பட்ட புதிய 4 வால்வ் வெர்ஷனை வெளியிட்டது ஹீரோ. முந்தைய மாடலைவிட அப்கிரேடு ஆகியிருக்கிறதா இந்த புதிய பைக் 'ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T 4V'. டிசைன்: முந்தைய மாடலில் பயனர்களுக்கு டிசைன் ஒரு குறையாக இருந்திருக்கும். பார்த்தும் ஈர்க்கக்கூடிய வகையிலான டிசைன் இல்லை. அதனை மாற்ற கொஞ்சம் முயற்சி செய்திருக்கிறது ஹீரோ. தற்போது மூன்று டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களுடன் நியோ ரெட்ரோ லுக்குடன் புதிய பைக்கை வெளியிட்டிருக்கிறது. வசதிகள்: வசதிகளைில் பழைய மாடலுக்கு, புதிய மாடலுக்கு பெரிய வித்தியாசமில்லை. அந்த மாடலில் கொடுக்கப்பட்டிருந்த அனைத்து வசதிகளை புதிய மாடலிலும் கொடுத்திருக்கிறது ஹீரோ. 200 4V-யைப் போன்றே ஸ்டார்ட்ர் மற்றும் கில் ஸ்விட்ச் இரண்டையும் ஒன்றாகக் கொடுத்திருக்கிறது.
இன்ஜின் மற்றும் பெர்ஃபாமன்ஸ்:
இன்ஜின் தான் இந்த பைக்கின் அடிப்படை மாற்றமே. முந்தைய 2-வால்வ் இன்ஜினுக்கு மாற்றாக, 19hp பவர், 17.35Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 199.6சிசி சிங்கிள் சிலிண்டர், ஆயில்-கூல்டு 4-வால்வ் இன்ஜினைப் பெற்றிருக்கிறது புதிய பைக். 200 4V-யிலும் இதே இன்ஜினை தான் பயன்படுத்தியிருக்கிறது ஹீரோ. ஆனால், இந்த பைக்கில் இன்னும் கொஞ்சம் விரைவாகும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறது இதன் இன்ஜின். பிரேக்கிங்: பிரேக்கிங்கிற்கு சிங்கிள் சேனல் ABS-உடன், இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்குகளைக் கொடுத்திருக்கிறது. டூயல் சேனல் ABS கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இறுதியாக.. ரூ.1.26 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இது ஒரு நல்ல பைக். எனினும், இதே செக்மண்டிலேயே இதன் போட்டியாளராக எக்ஸ்பல்ஸ் 200 இருப்பது தான் இதன் பெரிய மைனஸ்.