புதிய அப்டேட்களுடன் வெளியாகவிருக்கும் Xpulse 200 4V.. என்னென்ன மாற்றங்கள்?
செய்தி முன்னோட்டம்
தங்களுடைய 'Xபல்ஸ் 200 4V' பைக்கின் அப்டேட் செய்யப்பட்ட மாடலை வெளியிடத் தயாராகி வருகிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். தினமும் அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து என்னென்ன புதிய வசதிகளை கொடுத்திருக்கிறது என்பது குறித்த சிறிய டீசர் ஒன்றை வெளியிட்டு வருகிறது அந்நிறுவனம்.
என்னென்ன புதிய வசதிகளுடன் வெளியாகவிருக்கிறது Xபல்ஸ் 200 4V?
புதிய மறுவடிவம் செய்யப்பட்ட முகப்பு விளக்குள், அதில் H வடிவில் இருக்கக்கூடிய டிஆர்எல், டூயல் சேனல் ஏபிஎஸ், முன்பை விட சற்று உயரமான விண்டுஸக்ரீன்கள் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ்க்கான ரைடு மோடுகள் ஆகிய வசதிகளை கொடுத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுட்பமான மாற்றங்களே எனினும், இவை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான பயன்பாட்டு அனுபவத்தைக் கொடுக்கும்.
ஹீரோ
இன்ஜின் மற்றும் விலையில் மாற்றம்?
இந்தப் புதிய மாற்றங்களுடன் நெடுஞ்சாலைகளில் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை Xபல்ஸ் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜினில் எந்த மாற்றங்களும் இன்றி அதோ 19.1hp பவர் மற்றும் 17.35Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 199.6சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்/ஆயில் கூல்டு இன்ஜினையே பயன்படுத்தியிருக்கிறது ஹீரோ.
தற்போது இந்தியாவில் ரூ.1,38,766 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த ஹீரோ Xபல்ஸ் 200 4V. இந்த புதிய அப்டேட்களுடன் விலையும் இதனை விட கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.