ஹீரோ ஸூம் (Xoom) எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
செய்தி முன்னோட்டம்
கடந்த ஜனவரி மாதம் தங்கள் புதிய ஸ்கூட்டரான ஸூம்-ஐ (Xoom) இந்தியாவில் வெளியிட்டது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அந்நிறுவனத்தின் மாஸ்ட்ரோ எட்ஜ் 110 மற்றும் ப்ளஷர்+ ஆகிய ஸ்கூட்டர்கள் விற்பனையில் இருக்க இந்த புதிய ஸூம் இளம் தலைமுறையினருக்காகக் களமிறக்கியிருக்கிறது ஹீரோ.
வடிவமைப்பு மற்றும் வசதிகள்:
இளம் தலைமுறை என்று கூறும் போதே அந்த ஸ்போர்ட்டியான லுக்கையும் மனதில் வைத்தே புதிய ஸ்கூட்டரை டிசைன் செய்திருக்கிறது ஹீரோ.
H வடிவ DRL முன்பக்கத்திற்கு கூடுதல் ஈர்ப்பைக் கொடுக்கிறது. முன்பக்கத்தைப் போலவே பின்பக்கத்திலும் H வடிவ எல்இடி டெய்ல் லேம்ப் கொடுக்கப்பட்டிருக்கிறது.
LX, VX மற்றும் ZX என மூன்று வேரியண்டிகளில் வெளியாகியிருக்கிறது இந்த புதிய ஸூம்.
ஆட்டோமொபைல் ரிவ்யூ
இன்ஜின் மற்றும் பெர்ஃபாமன்ஸ்:
8.15hp பவர் மற்றும் 8.70Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 110 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜினைப் பெற்றிருக்கிறது இந்த ஸூம். மற்ற இரண்டு ஸ்கூட்டர்களிலும் இதே இன்ஜின் தான் பயன்படுத்தியிருக்கிறது என்றாலும், ஸூம்-க்காக இன்ஜினை ட்யூன் செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஹீரோ.
குறைவான வேகத்தில் கொஞ்சம் சுமாராக இருந்தாலும், 50 கிமீ வேகத்தை கடந்துவிட்டால் இன்ஜின் ஸ்மூத்தாகிவிடுகிறது. i3s வசதியுடன் வருவதால் ஹீரோவின் அதிக மைலேஜ் கொடுக்கும் ஸ்கூட்டர் இதுதானாம்.
இறுதியாக..
சிறப்பான டிசைன், நிறைய வசதிகள், ஓகேவான பெர்ஃபாமன்ஸூடன் ரூ.68,599 தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது இந்த ஸூம்.
பெர்ஃபாமன்ஸ் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, வசதிகளும், டிசைனும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு இது ஒரு நல்ல ஸ்கூட்டர் தான்.