LOADING...
சென்னையில் ரூ.3,250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி ஆலையை துவக்குகிறது  ஃபோர்டு நிறுவனம்
சென்னையில் ரூ.3,250 கோடி முதலீட்டில் ஃபோர்டு நிறுவனம் என்ஜின் உற்பத்தி ஆலை துவக்கம்

சென்னையில் ரூ.3,250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி ஆலையை துவக்குகிறது  ஃபோர்டு நிறுவனம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 31, 2025
06:20 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, நான்கு வருட இடைவெளிக்குப் பிறகுத் தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மறைமலைநகரில் உள்ள தனது ஆலையில் அடுத்த தலைமுறை என்ஜின் உற்பத்தி ஆலையை அமைப்பதற்காகத் தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஃபோர்டு நிறுவனம் இந்தத் திட்டத்திற்காக ரூ.3,250 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் 600 நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் அதன் விநியோகச் சங்கிலி வழியாகப் பல மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஆலையின் ஆண்டுக் கொள்ளளவு 2,35,000 என்ஜின்கள் ஆக இருக்கும் என்றும், உற்பத்திப் பணிகள் 2029 இல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஷ்டம்

நஷ்டம் காரணமாக வெளியேற்றம்

சென்னையில் உற்பத்தி செய்யப்படும் என்ஜின்கள், ஃபோர்டின் உலகளாவிய வளர்ச்சி உத்திக்கேற்ப, ஏற்றுமதிச் சந்தைகளுக்கு மட்டும் அனுப்பப்படும். 2021 இல் வாகன உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு, 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான நஷ்டம் காரணமாக இந்தியச் சந்தையில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், இந்தப் புதிய முதலீடு, இந்தியாவின் வலுவான உற்பத்தித் திறனை உலகளாவிய தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ள ஃபோர்டு நிறுவனம் எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் முழு வாகன உற்பத்தியைத் தொடங்க பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.