டுகாட்டி மோட்டார் சைக்கிள்கள் விலை, ஜனவரி 1, 2023 முதல் உயரும்
டுகாட்டி இந்தியா, தனது மோட்டார் சைக்கிள்களின் விலையை, வரும் ஜனவரி 1, 2023 முதல் உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் உள்ளீட்டு விலைகள், மூலப்பொருட்கள், தளவாடங்கள் மற்றும் உற்பத்திச் செலவு ஆகியவற்றை, விலை உயர்விற்கான காரணங்களாக, நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், எவ்வளவு விலை ஏற்றபடவுள்ளது என எந்த தகவலும் இதுவரை இல்லை. மற்ற வாகன உற்பத்தியாளர்களும் இதே போன்றொரு விலை ஏற்றத்தை ஏற்கனவே அறிவித்துள்ளனர். மாருதி சுசுகி, ஹூண்டாய், வோக்ஸ்வேகன், டாடா மோட்டார்ஸ், பென்ஸ், ஆடி, கியா, ரெனால்ட் மற்றும் டார்க் மோட்டார்ஸ் ஆகியவையும் ஜனவரி 1, 2023 முதல் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்துவதாக அறிவித்திருந்தன. டுகாட்டி இந்தியா அறிவித்துள்ள விலை உயர்வு, மோட்டார் சைக்கிள்களின் எக்ஸ்-ஷோரூம் விலையில் விதிக்கப்படும்.
டுகாட்டி மோட்டார் சைக்கிள்கள்
இந்த விலை உயர்வு, பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் கொச்சி போன்ற நகரங்களில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட டுகாட்டி டீலர்ஷிப்களிலும் ஒரு சேர நடைபெறும். இத்தனை மாதங்கள், மூல பொருட்களின் விலையேற்றத்தை, நிறுவனமே தாங்கி கொண்டதாகவும், அடுத்த ஆண்டு முதல், அதை வாடிக்கையாளர்களுடன் பங்கிட போவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. டுகாட்டி இந்தியா, இந்திய சந்தையில் வலுவாக இருப்பதாகவும், உலகளாவிய அனைத்து தயாரிப்புகளையும், இந்திய சந்தைக்குக் கொண்டு வர இருப்பதாகவும், ஜனவரி, 2023 ஆம் ஆண்டில், MY23 மோட்டார் சைக்கிள் வரிசையில் ஒரு புதுப்பிப்பை வழங்கப்போவதாகவும் கூறியுள்ளது. இந்த MY23 மோட்டார் சைக்கிள் வரிசையை, இந்நிறுவனம், டுகாட்டி வேர்ல்ட் ப்ரீமியர் 2023 இல் அறிமுகப்படுத்தியது.