
அற்புதமான எக்ஸ்சேஞ் திட்டத்தை இந்தியாவில் அறிவித்தது டுகாட்டி
செய்தி முன்னோட்டம்
மதிப்புமிக்க இத்தாலிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான டுகாட்டி, சமீபத்தில் இந்தியாவில் ஒரு கவர்ச்சிகரமான எக்ஸ்சேஞ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஏப்ரல் 20 மற்றும் 21 தேதிகளில் ரூ.25,000 போனஸும் வழங்கப்படுகிறது.
கூடுதலாக, குறிப்பிட்ட V4 மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு டுகாட்டி நிறுவனம் ரூ1.5 லட்சம் வரை மதிப்புள்ள ஸ்டோர் கிரெடிட்டை வழங்குகிறது.
இந்த திட்டமானது 9.99% வட்டி விகிதத்தையும் ரூ.18,999 EMI விருப்பத்தையும் கொண்டுள்ளது.
இந்த எக்ஸ்சேஞ் திட்டத்தின் ஒரு பகுதியாக, முந்தைய மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களிடம் இருந்து தடையற்ற முறையில் உரிமையை மாற்றுவதற்கு டுகாட்டி இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.
டுகாட்டி இந்தியா
இந்த V4 மாடல்கள் இந்தியாவில் விற்கப்படுகின்றன
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய பைக்குகளை எந்தவித இடையூறும் இன்றி விற்க முடியும்.
இந்தச் சலுகையைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு அருகிலுள்ள டுகாட்டி டீலர்ஷிப்களைத் தொடர்புகொள்ளுமாறு நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.
டுகாட்டியின் பிரீமியம் V4 பிரியர்கள் எளிதாக அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டுகாட்டி நான்கு V4 மோட்டார் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்கிறது. அவற்றில் பனிகேல் V4/ V4 S, ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4, டயவல் வி4 மற்றும் மல்டிஸ்ட்ராடா வி4 ஆகியவை அடங்கும்.