புதிய வளர்ச்சி திட்டங்களை அறிவித்த டெல்பி - டிவிஎஸ்!
செய்தி முன்னோட்டம்
டீசல் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ப்யூல் இன்ஜெக்ஷன்றிகான காமன் ரெய்ல் சிஸ்டம்களை தயாரிக்கும் நிறுவனமான டெல்பி-டி.வி.எஸ் நிறுவனம் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் குறித்து அறிவித்திருக்கிறது.
அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.150 கோடி ரூபாயை முதலீடு செய்து ஒரகடத்தில் இருக்கும் தங்கள் தொழிற்சாலையை விரிவுபடுத்தத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
தற்போது வருடத்திற்கு 6 லட்சம் காமன் ரெய்ல்களை தயாரித்து வருகிறது அந்நிறுவனம், இதனை அடுத்த நான்கு வருடங்களில் 1 மில்லியன் என்ற அளவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர் விஸ்வநாதன்.
கடந்த நிதியாண்டில், அதற்கு முந்தைய நிதியாண்டை விட 20% அதிகமாக ரூ.1,800 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது இந்நிறுவனம்.
ஆட்டோமொபைல்
டெல்பி - டிவிஎஸ்:
அமெரிக்காவைச் சேர்ந்த டெல்பி கார்ப்பரேஷன் மற்றும் இந்தியாவின் டிவிஎஸ் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியே டெல்பி-டிவிஎஸ்.
டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் அசோக் லேலாண்டு ஆகிய நிறுவனங்களுக்கு டீசல் ப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டமை விநியோகம் செய்து வருகிறது டெல்பி-டிவிஎஸ்.
இனி வரும் காலங்களில் ட்ராக்டர்கள் மற்றும் வணிக ரீதியிலான வாகனங்களுக்கும் காமன் ரெய்ல் சிஸ்டத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விஸ்வநாத்.
கடந்த செவ்வாய்க்கிழமையோடு 3 மில்லியன் காமன் ரெய்ல் சிஸ்டங்களை உற்பத்தி செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.