இப்போது உங்கள் பழைய காரின் நம்பர் பிளேட்டை பாரத் (BH) சீரிஸுக்கு எளிதாக மாற்றலாம்
பாரத் சீரிஸ் நம்பர் பிளேட் பயன்பாடு, 2021 இல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. வேறு மாநிலத்திற்கு மாற்றலாகி செல்லும்போதும், சாலை வரி உட்பட, வாகனத்தை மறுபதிவு செய்ய வேண்டி இருக்கும். அதை நீக்கும் பொருட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த பாரத் சீரிஸ் நம்பர் பிளேட். இந்த முறை அமலுக்கு வந்தபோது, புதிய வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டது. இப்போது பழைய வாகனங்களுக்கும் இந்த வசதியை நீட்டித்துள்ளது. BH எண்களை, பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மத்திய அரசு/மாநில அரசு/மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும். இது நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதால், பணி காரணமாக வேறு மாநிலத்திற்கு மாற்றலாகும் போது சிரமம் இருக்காது.
பாரத் சீரிஸ் நம்பர் பிளேட்
BH எண்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 'Vahan ' என்ற இணையதளத்திற்கு சென்று, தங்களுக்கு அருகாமையில் உள்ள ஆட்டோமொபைல் டீலரை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் அந்த டீலர், உரிமையாளர் சார்பாக Vahan தளத்தில், ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள், தங்களை பணியமர்த்துபவர்களிடமிருந்து, பணிபுரியும் சான்றிதழ் மற்றும் படிவம் 60, என இரண்டையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை அங்கீகரிக்கும் முன், சம்மந்தப்பட்ட மாநிலத்தின் அதிகாரி, உரிமையாளரின் விபரத்தை சரிபார்ப்பார். BH நம்பர் பிளேட் கார்களுக்கான சாலை வரி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அல்லது இரண்டின் மடங்குகளில், உரிமையாளர் மாநிலத்தில் வாசிக்க போகும் காலத்தின் அடிப்படையில் வசூலிக்கப்படும். இந்த BH நம்பர் பிளேட், இரு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது