பிஎம்டபுள்யு ஐ விஷன் டீ: நொடிகளில் நிறத்தை மாற்றும் அதிசய கார்
ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளரான பிஎம்டபுள்யு, சில நொடிகளில் நிறத்தை மாற்றக்கூடிய, ஒரு அதிசய காரை வெளியிட்டது. பிஎம்டபுள்யு ஐ விஷன் டீ (BMW I vision Dee) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிசய கார், பச்சோந்தியை போல நிறத்தை மாற்றும் வல்லமை பெற்றுள்ளது. மேலும், அதன் ஹெட்-அப் டிஸ்ப்ளேவின் பரிணாம வளர்ச்சியாக, விண்ட் ஸ்க்ரீன் கண்ணாடியின் முழு அகலத்திலும் தகவல்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸில் நடைபெற்ற நுகர்வோர் மின்னணு கண்காட்சி (CES) 2023 இல், இந்த BMW i Vision Dee காட்சிப்படுத்தப்பட்டது. இந்த அதிசய கார்-ஐ பற்றி BMW ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
பிஎம்டபுள்யு ஐ விஷன் டீ
பிஎம்டபுள்யு ஐ விஷன் டீ-யின் சிறப்பம்சங்கள்
இந்த செடான் வகை, EV பிஎம்டபுள்யு கார், சுற்றுப்புறங்களுக்கு தகுந்தாற்போல, செயற்கை அறிவாற்றல் பொருந்திய வகையில் செயல்படும் என கூறப்படுகிறது. BMW i Vision Dee , பயனருக்கு ஏற்றவாறு, ஓட்டுநரின் பக்க ஜன்னல்களில், தனிப்பயனாக்கப்பட்ட உருவ பொம்மையுடன், நபரை வரவேற்கும். காரின் கதவுகள், தானியங்கி மூலம் இயக்கப்படும். பிஎம்டபுள்யு மிக்ஸ்டு ரியாலிட்டி ஸ்லைடர் கொண்டு, விண்ட்ஸ்கிரீனை படிப்படியாக டிஜிட்டல் ப்ரொஜெக்ட்டராக மாற்றும். இது போல மேலும் பல சிறப்பங்சங்கள் உள்ளதென்றும், அவை குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.