Page Loader
இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிடும் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிஸ்கர் நிறுவனம்
இந்தியாவில் ஃபிஸ்கர் வெளியிடவிருக்கும் ஓஷன் எலெக்ட்ரிக் கார்

இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிடும் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிஸ்கர் நிறுவனம்

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 18, 2023
03:06 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபிஸ்கர், இந்தியாவில் தங்களது முதல் காரை அறிமுகப்படுத்தவிருப்பதை உறுதி செய்திருக்கிறது. ஓஷன் எலெக்ட்ரிக் என்ற புதிய எஸ்யூவி மாடலின் தயாரிப்பை கடந்த ஆண்டு தொடங்கியது ஃபிஸ்கர். மேலும், கடந்த ஏப்ரல் மாதம் தான் ஃபிஸ்கர் விக்யான் என்ற பெயரில் ஹைதராபாத்தில் தங்களது தலைமையகத்தையும் அமைத்தது அந்நிறுவனம். ஓஷன் எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடுமா, வெளியிடாதா என்ற குழப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், அந்த மாடலின் டாப் எண்டனை இந்தியாவில் ஓஷன் எக்ஸ்ட்ரீம் விக்யான் என்ற பெயரில் வெளியிடவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். மேலும், தற்போது 100 யூனிட்டுகளை மட்டுமே விற்பனை செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எலெக்ட்ரிக் கார்

ஓஷன் விக்யான் எக்ஸ்ட்ரீம்: 

ஃபிஸ்கரின் ஓஷன் எலெக்ட்ரிக் எக்ஸ்ட்ரீம் மாடலானது 572hp பவர் மற்றும் 737Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பைக் கொண்டிருக்கிறது. மேலும், 113kWh பேட்டரி பேக்குடன் 707 கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கிறது ஓஷன் எலெக்ட்ரிக் மாடலின் டாப் என்டான எக்ஸ்ட்ரீம் வேரியன்ட். 17.1 இன்ச் ரிவால்விங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் ரியர்வ்யூ மிரர், ADAD பாதுகாப்பு அம்சங்கள், பவர்டு டெயில்கேட் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கிறது ஓஷன் எலெக்ட்ரிக் எக்ஸ்ட்ரீம். இந்தியாவில் இறக்குமதி வரியைச் சேர்த்து ரூ.1 கோடிக்கு மேலான விலையில் இந்தக் கார் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பரில் இதனை வெளியிட்டு, இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் டெலிவரியை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.