சமூக வலைத்தளங்களில் வைரலான நடிகர் மாதவனின் சூப்பர்பைக் கலெக்ஷன்
செய்தி முன்னோட்டம்
'அலைபாயுதே' திரைப்படத்தில், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு, மேடி (Maddy) பைக்கில் ஸ்டைலாக வரும் காட்சியை நாம் அனைவரும் ரசித்திருப்போம். திரைப்படத்தைப் போலவே நிஜத்திலும் பைக்குகளின் மீது தீராக் காதல் கொண்டவர் நடிகர் மாதவன்.
மாதவன் தன்னுடைய கேரேஜில் பல்வேறு சூப்பர் பைக் மாடல்களை வைத்திருக்கிறார். தன்னுடைய சூப்பர் பைக்குகளை அவர் ஓட்டும் காணொளி ஒன்று, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்தக் காணொளியில் ஒரு அபார்ட்மெண்டின் பார்க்கிங் ஏரியாவில் தன்னுடைய சூப்பர் பைக்குகளை ஒவ்வொன்றாக ஓட்டிய படியே வலம் வருகிறார் மேடி. இந்த வீடியோவை தற்போது பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சூப்பர்பைக்
நடிகர் மாதவனின் பைக் கலெக்ஷன்:
சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் அந்தக் காணொளியில், முதலில் 'யமஹா V மேக்ஸ்' க்ரூஸர் பைக்கை ஓட்டி வருகிறார் மாதவன். 200hp பவரை வெளிப்படுத்தும் 1679சிசி V4 லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொண்ட இந்த பைக்கானது, ரூ.24 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டது.
இரண்டாவதாக, ரூ.40 லட்சம் மதிப்புடைய இந்தியன் ரோட்ஸ்டர் மாடல் க்ரூஸர் பைக்கை இயக்குகிறார் மாதவன். இந்த பைக்கில் 1181சிசி தண்டர்ஸ்ட்ரோக் 111, V-ட்வின் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனைத் தவிர்த்து ரூ.20 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை கொண்ட 'டுகாட்டி டியாவெல்', 'ட்ரையம்ப் ராக்கெட் 3' மற்றும் ரூ.33 லட்சம் மதிப்புடைய 'பிஎம்டபிள்யூ K1600 GTL' ஆகிய சூப்பர்பைக்குகளையும் தன்னுடைய கேரேஜில் வைத்திருக்கிறார் மாதவன்.