ஹீரோவின் புதிய கரிஸ்மா XMR.. என்ன வசதிகள்? எப்போது வெளியீடு?
செய்தி முன்னோட்டம்
டீலர்களுக்கு மட்டும் நடைபெற்ற நிகழ்வில், விரைவில் வெளியாவிருக்கும் புதிய கரிஸ்மா XMR பைக்கை காட்சிப்படுத்தியிருக்கிறது ஹீரோ நிறுவனம்.
2003-ல் இந்தியாவலேயே உருவாக்கப்பட்ட முதல் 250சிசி பைக்கான கரிஸ்மாவை கடந்த 2019-ல் விற்பனை வீழ்ச்சியின் காரணமாக தயாரிப்பை நிறுத்தியது ஹீரோ.
தற்போது புதிய அவதாரம் எடுத்து, புதிய இன்ஜினுடன் மீண்டும் இந்தியாவில் வெளியிடப்படவிருக்கிறது கரிஸ்மா.
விற்பனை நிறுத்தப்பட்ட மாடலை விட தற்போது காட்சிப்படுத்தியிருக்கும் மாடலில் அனைத்து புதுமையைக் கையாண்டிருக்கிறது ஹீரோ. எனவே, பழைய கரிஸ்மாவைப் போல புதிய கரிஸ்மா இருக்காது என்பது மட்டும் உறுதி.
மேலும், தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மற்ற ஹீரோ பைக்குகளின் டிசைன்களில் இருந்து புதிய கரிஸ்மாவின் டிசைன் தனித்துத் தெரிகிறது.
ஹீரோ
இன்ஜின், வசதிகள் மற்றும் விலை:
இந்தப் புதிய கரிஸ்மா குறித்த தகவல்கள் எதையும் ஹீரோ நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
எனினும், 210சிசி லிக்விட்-கூல்டு இன்ஜினை புதிய பைக்கில் ஹீரோ பயன்படுத்தியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய இன்ஜினானது 25hp பவர் மற்றும் 30Nm டார்க்கை வெளிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கரிஸ்மாவிற்கு டூயல் சேனல் ஏபிஎஸ்-ஸைக் கொடுத்திருக்கிறது ஹீரோ. டூயல் சேனல் ஏபிஎஸ்-ஸூடன் வெளியாகும் முதல் பைக் கரிஸ்மாவாகவே இருக்கும்.
2019-ல் விற்பனை நிறுத்தப்பட்ட போது ரூ.1.06 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது கரிஸ்மா. தற்போது ரூ.1.6 லட்சம் முதல் 1.8 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
R15 V4 மற்றும் ஜிக்சர் SF 250 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக வெளியாகவிருக்கிறது கரிஸ்மா.