ஹூண்டாய் வெர்னா 2023 vs ஹோண்டா சிட்டி - எது சிறந்த கார்?
செய்தி முன்னோட்டம்
ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா கார் மாடலை அறிமுகம் செய்திருந்தது. இந்த புதிய 2023 வெர்னா மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம் என துவங்குகிறது.
முன்பதிவில் சக்கைப்போடும் வெர்னா கார் ஹோண்டா சிட்டி காருக்கு போட்டியாக அமைந்துள்ளது. இதில் எது சிறந்தவை என்பதை பார்க்கலாம்.
ஹோண்டா சிட்டி vs ஹூண்டாய் வெர்னா
ஹோண்டா சிட்டி கார் ஆனது இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார் ஆக உள்ளது. இதில் இரண்டு வேரியண்ட்டில் ஹைபிரிட் கொண்ட கார் தான் அதிக மைலேஜ்-யை வழங்குகிறது.
ஒரு லிட்டருக்கு இது 27.13 கிமீ வழங்குகிறது. இத்தோடு இதில் இ-சிவிடி கியர்பாக்ஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
கார் நிறுவனங்கள்
Hyundai Verna Vs Honda City - சிறந்த கார் எது?
ஆனால் ஹூண்டாய் வெர்னா கார் எந்த ஒரு ஹைபிரிட் இல்லாமலேயே ஹூண்டாய் வெர்னா அதிகம் மைலேஜ் தரும் காராக விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
இவை முதலில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18.6 கிமீ முதல் 19.6 கிமீ வரை மைலேஜை வழங்கும் எனக்கூறியுள்ளது.
அதேப்போல், டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 20 கிமீ முதல் 20.6 கிமீ வரையில் மைலேஜை வழங்கும் என தெரிவித்துள்ளது.
எதை வாங்கலாம்?
ஹோண்டா சிட்டி கார் ரூ. 11.49 லட்சம் மற்றும் ரூ. 20.39 லட்சம் வரை கிடைக்கும்.
ஹூண்டாய் வெர்னா ரூ. 10.9 லட்சம் மற்றும் ரூ. 17.38 லட்சம் வரையில் கிடைக்கும். இதனால் வெர்னா கார் சிறந்தவையாக செயல்படுகிறது.