Kawasaki Vulcan S 2023: 7 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்!
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் கவாஸாகி Vulcan S மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பைக் விலை 7 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என எக்ஸ் ஷோரூம் விலையில் நிர்ணயம் செய்துள்ளனர். 2023 ஆண்டில் இந்த பைக் ஆனது மெட்டாலிக் மேட் கார்பன் கிரே என்ற ஒற்றை நிற ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த பைக்கில் ஆக்ரோஷமான வடிவமைப்பு, 649cc பேரலல் டுவின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்தோடு 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த ப்ரேக்கிங்கிற்காக 300mm சிங்கில் டிஸ்க் முன்புறத்தில், 250mm ரோட்டார் டூயல் சேனல் ஏபிஎஸ் பின்புறத்திலும் வழங்கப்பட்டு இருக்கிறது.