வியட்நாமில் தங்கத்தால் வீடு கட்டிய தொழிலதிபர் - சுற்றுலாத்தலமாக மாற்றி நுழைவு கட்டணம் வசூலிப்பு
செய்தி முன்னோட்டம்
ஒவ்வொரு மனிதருக்கும் வீடு கட்டுவது என்பது பெரும் கனவு. எனினும் அந்த யோகம் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.
ஒரு சிலருக்கே தங்கள் வீட்டினை பார்த்து பார்த்து கட்டக்கூடிய சூழல் அமைகிறது.
அந்த வகையில், வியட்நாம் நாட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஈகுவன் வான் ட்ரங் என்பவர் முழுக்க முழுக்க தங்கத்தால் தனது வீட்டை கட்டியுள்ளார்.
தன் வீட்டை வித்யாசமான முறையில் கட்ட நினைத்த அவர் பல நாடுகளுக்கு சென்று பல கட்டிடங்களை பார்வையிட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் தனது வீட்டினை தங்கத்தால் கட்ட முடிவு செய்து, கட்டிட கலைஞர்களை வரவழைத்து தன் விருப்பம் குறித்து எடுத்துரைத்து வீட்டினை கட்ட ஆரம்பித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளாக கட்டப்பட்ட வீடு
சுமார் 3 தளங்களை கொண்ட தங்க வீடு-தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு அலங்கரிப்பு
இந்த வீட்டினை கட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த வீட்டில் சுவர்களில் கூட தங்க முலாம் பூசப்பட்டுள்ளது, வீட்டில் உள்ள எல்லா பொருட்களும் தங்கத்தால் செய்யப்பட்டது.
சுமார் மூன்று தளங்களை கொண்ட இந்த தங்க வீடு, தனித்துவமான கட்டிடக்கலை, தங்க பால்கனி, தங்க சமையல் பாத்திரங்கள், விளக்குகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பல சிலைகள் என பார்ப்போர் மனதை பெரிதும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
இந்த வீடானது தற்போது சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ள இந்த வீட்டினை சுற்றிப்பார்க்க ரூ.400 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் அவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய ஈகுவன் வான் ட்ரங் வீட்டிற்கு அருகிலேயே ஓர் உணவகத்தை திறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.