Loading...
அமெரிக்காவில் உள்ள ஈரானிய சொத்துகளை பறிமுதல் செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவு: ஈரானிய வெளியுறவு அமைச்சர் கடும் எச்சரிக்கை
ஈரானிய சொத்துகளை பறிமுதல் செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவு

அமெரிக்காவில் உள்ள ஈரானிய சொத்துகளை பறிமுதல் செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவு: ஈரானிய வெளியுறவு அமைச்சர் கடும் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2026
11:40 am

செய்தி முன்னோட்டம்

வளைகுடா பகுதியில் தாக்குதல்களால் சேதமடைந்த கப்பல்கள் மற்றும் சரக்குகளுக்கான இழப்பீட்டை, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானின் முடக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த முடிவுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது உலகளாவிய நிதியியல் நடைமுறைகளைச் சீர்குலைக்கும் ஒரு ஆபத்தான நடவடிக்கை என்றும் எச்சரித்துள்ளார்.

அறிவிப்பு

டிரம்பின் அறிவிப்பும் ஈரானின் எச்சரிக்கையும்

தனது டிரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், வளைகுடா பகுதியில் கப்பல்கள் மற்றும் சரக்குகளுக்கு ஏற்படும் அனைத்துச் சேதங்களுக்கும் அமெரிக்காவிடம் உள்ள ஈரானியப் பணமே இழப்பீடாகப் பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அப்பாஸ் அராக்சி, "தொடர்பில்லாத எதிர்காலக் கோரிக்கைகளுக்காக ஒரு நாட்டின் சொத்துக்களைக் பறிமுதல் செய்வது மிக மோசமான முன்னுதாரணமாகும்; இதனால் ஏற்படும் குழப்பங்கள் அமைதியானதாக இருக்காது" என எச்சரித்துள்ளார்.

தாக்குதல்

தொடரும் ராணுவத் தாக்குதல்கள்

இதனிடையே, ஈரானிய ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாக 13-வது இரவாகத் தீவிரத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் அஹ்வாஸ் மற்றும் பண்டார் அப்பாஸ் போன்ற முக்கிய துறைமுக நகரங்களில் கடுமையான வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முந்தைய தாக்குதல்களை விட மிகவும் கடுமையான மற்றும் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை ஈரான் மீது நடத்தத் திட்டமிட்டு வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT