Loading...
ஈரானில் திருமண விழாவில் விழுந்த அமெரிக்க ஏவுகணை பாகங்கள்: சிறுவன் உட்பட 4 பேர் பரிதாப பலி
அமெரிக்க ஏவுகணையின் சிதறிய பாகங்கள் விழுந்து தாக்கியதில், சிறுவன் ஒருவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்

ஈரானில் திருமண விழாவில் விழுந்த அமெரிக்க ஏவுகணை பாகங்கள்: சிறுவன் உட்பட 4 பேர் பரிதாப பலி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2026
07:40 am

செய்தி முன்னோட்டம்

தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள கூஹெஸ்டாக் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு குடியிருப்பு வீட்டின் மீது அமெரிக்க ஏவுகணையின் சிதறிய பாகங்கள் விழுந்து தாக்கியதில், சிறுவன் ஒருவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஈரான் செம்பிறை சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிரிக் மாவட்டத்தில் அமைந்துள்ள கூஹெஸ்டாக் நகரத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அப்பகுதியில் பெரும் அழிவுகளும், மக்களின் அலறல் சத்தங்களும் கேட்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. சம்பவ இடத்திற்கு உடனடியாக மீட்புக் குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து வருகின்றனர்.

கண்டனம்

ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் கண்டனம்

இந்தச் சம்பவத்தை ஒரு போர் குற்றம் என்று வர்ணித்துள்ள ஈரான் அதிகாரிகள், இதற்கு அமெரிக்கா தகுந்த பதிலடியை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

இது குறித்து பதிவிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக சர்வதேச சமூகம் மௌனம் காப்பது நடுநிலைமை அல்ல என்றும், இதற்குத் தகுந்த நேரத்தில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டிய முக்கியப் பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மினாப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலின் சுவடு மாறுவதற்குள், தற்போது திருமண வீட்டில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT