Loading...
முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் முதல்முறையாக பிரிட்டன் அரசு முறைப் பயணம்
முதல்வர் விஜய் பிரிட்டனுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவ

முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் முதல்முறையாக பிரிட்டன் அரசு முறைப் பயணம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2026
10:12 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை பெருமளவில் ஈர்ப்பதற்காக, மாநில தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தைவானுக்கும், முதல்வர் விஜய் பிரிட்டனுக்கும் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் மாநிலங்களில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், தமிழக அரசு தொழில் துறை வளர்ச்சிக்கானப் பணிகளை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.

'செமிகான்' மாநாடு

தைவான் 'செமிகான்' மாநாட்டில் அமைச்சர் கீர்த்தனா

தைவானில் இந்த வாரம் நடைபெறும் 'Semicon' சர்வதேச மாநாட்டில் செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு (AI), சிப் தயாரிப்பு உள்ளிட்ட முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

செப்டம்பர் 4-ம் தேதி அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் குழு தைவான் செல்கிறது.

சர்வதேச செமிகண்டக்டர் மற்றும் சிப் தயாரிப்பு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தல்.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைந்த பின், கடந்த மே மாதம் அமைச்சர் கீர்த்தனா தென்கொரியா சென்று கப்பல் கட்டும் நிறுவனங்களின் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்யின் முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணம்

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அரசு முறை பயணம் இதுவாகும்.

இந்த பயணத்தில் முதல்வர் விஜய் மற்றும் உயர்மட்டத் தொழில் துறை அதிகாரிகள் பங்கெடுக்கிறார்கள்.

வரும் செப்டம்பர் 10 முதல் 16 வரை பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இக்குழுவினர் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், சர்வதேச நிறுவனங்களின் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுவதாகும்.

ADVERTISEMENT