பால் உற்பத்தியாளர்களுக்கு முதல்வர் விஜய் சூப்பர் அறிவிப்பு! கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்குப் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 31) விதி எண் 110ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தப்பட்டு, இனி ஒரு லிட்டர் பால் ரூ.44 என்ற புதிய விலையில் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
விலை பின்னணி
படிப்படியாக உயர்த்தப்பட்ட கொள்முதல் விலை பின்னணி
முன்னதாக தமிழக அரசு பால் கொள்முதல் விலையை இரண்டு வாரங்களுக்கு முன்பு லிட்டருக்கு ரூ.38ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தியிருந்தது.
இருப்பினும், தீவன செலவு மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் எனப் பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தற்போதைய உயர்வை சேர்த்து, கொள்முதல் விலை முழுமையாக லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN || பால் கொள்முதல் விலை - லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு | #TNAssembly | #TNGovt | #TVKGovt | #CMVijay | #SpeakerJCDPrabhakar | #TVK | #DMK | #UdhayanidhiStalin | #ADMK | #EPS | #TNAssemblyUpdateswithPolimerNews pic.twitter.com/hhBpzqWYjs
— Polimer News (@polimernews) August 31, 2026